a

இன்ஸ்டாகிராம் நட்பு – கடத்தலில் முடிந்த பகீர் சம்பவம்! நடந்தது என்ன?


கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவருக்கு வயது 23.

தச்சு பணி செய்து வரும் சரவணகுமார் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்துள்ளார். அதன் மூலம் தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்த மோகனாம்பிகை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மோகனாம்பிகைக்கு திருமணமாகி குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களது நட்பு தீவிரமாகி இறுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையாக மாறியுள்ளது.

சரவணகுமாரிடம் மோகனாம்பிகை சில மாதங்களுக்கு முன்பு 1.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பித் தருவதாக சொல்லி அவர் அதன்மூலம் தனது கணவருக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார்.

Also Read  கோயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த வன்கொடுமை; நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

ஆனால் அவர் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் சரவணகுமார் தர்மபுரிக்கு சென்று மோகனாம்பிகை வீட்டில் வைத்து பணத்தை கேட்டுள்ளார். அப்போதும் மோகனாம்பிகை பணம் தர மறுத்து விட்டார் என்று கூறப்படுகிறது.

Also Read  வைத்தியம் சொன்ன சாப்பாட்டு ராமனுக்கு கொரோனா வந்த பரிதாபம்…!

இதனால் ஆத்திரம் அடைந்த சரவணகுமார் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த மோகனாம்பிகையின் ஏழு வயது மகனை கடத்தி கோவைக்கு வந்துள்ளார்.

இது ஆரம்பத்தில் மோகனாம்பிகை வீட்டுக்கு தெரியவில்லை. நீண்ட நேரமாகியும் மகனை காணவில்லை என்பதால் தர்மபுரி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Also Read  அடுத்த மாதம் சென்னை வருகிறார் பிரதமர் மோடி

இதையடுத்து கோவை வந்த தர்மபுரி போலீசார் வடவள்ளி போலீஸ் உதவியுடன் சிறுவனை மீட்டனர். மேலும் சரவணகுமாரை கைது செய்து விசாரணைக்காக அவரை அழைத்து சென்றனர். சிறுவனை கடத்திய காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா 3-வது அலை – பெற்றோர்களே உஷார்…!

sathya suganthi

ஸ்ட்ரைக்குக்கு இல்லை விடுப்பு: தமிழக அரசு கண்டிப்பு

Tamil Mint

சென்னைக்கு வருபவர்களுக்கு செக், மாநகராட்சி நடவடிக்கை

Tamil Mint

அவசர கோலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மருத்துவ அறிவியலுக்கு பொருத்தமானதல்ல –

Tamil Mint

தொழிலதிபரை மணக்கிறாரா பிக் பாஸ் ஜூலி?

Tamil Mint

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் யார்? – இன்று மீண்டும் கூடுகிறது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

sathya suganthi

வெறும் 4 நாட்கள் மட்டும் தான் சட்டசபை கூட்டத்தொடர் நடக்குமா?

Tamil Mint

அமுமுகவை மன்னார்குடி மாஃபியா என்றுதான் நான் இன்னும் கருதுகிறேன்.. சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

Tamil Mint

மநீம 4-ம் ஆண்டு விழா; பிரம்மாண்ட மாநாடுடன் களமிறங்கும் கமல்!

Tamil Mint

உப்பலத்தில் மிதந்த ஆதரவற்ற மூதாட்டி உடல்….

VIGNESH PERUMAL

உலகளவில் 2.80 கோடி பேருக்கு கொரோனா

Tamil Mint

தமிழகம்: மயிலாடுதுறை தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகவுள்ளது

Tamil Mint