a

சர்வதேச இணையதளங்கள் திடீர் முடக்கம்… காரணம் இதுதான்..!


சர்வதேச அளவில் இயங்கும் பல முக்கிய இணையதளங்கள் சில மணி நேரம் செயல்படாமல் முடங்கின. இதனால் அதன் பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.

ரெட்டிட், ஸ்பாட்பை, ஹச்பிஓ மேக்ஸ், அமேசான், ஹுலு, கார்டியன், நியூயார்க் டைம்ஸ், பிபிசி உள்ளிட்ட எண்ணற்ற இணையதளங்கள் திடீரென செயல்படாமல் முடங்கின.

Also Read  டிராஃபிக் அதிகம் உள்ள சாலையில் கார் ஓட்டிச்சென்ற 5 வயது சிறுவன்; பெற்றோரைத் தேடும் போலீஸ்! - வீடியோ

இந்த இணையதளங்களுக்கு சென்ற பயனர்களுக்கு 503 எரர் என்ற செய்தி திரையில் தோன்றியதால் இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவிட தொடங்கினர்.

இதற்கு காரணம் இந்த தளங்களுக்கு கிளவுட் சேவை தரும் பாஸ்ட்லி என்கிற அமெரிக்க நிறுவனம் என்பது தெரியவந்துள்ளது.

Also Read  60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளம் – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

பாஸ்ட்லி-ன் கிளவுட் சேவையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டதால் அதன் வாடிக்கையாளராக இருக்கும் இந்த முக்கிய இணையதளங்கள் அனைத்தும் முடங்கின. இதுகுறித்து விசாரித்து வருவதாக அந்நிறுவனம் பதிவிட்டது.

பின்னர், சிறிது நேரத்தில் பிரச்சினை என்ன என்பது அடையாளம் காணப்பட்டு சரி செய்யப்பட்டு வருவதாக அந்நிறுவனம் பதிவிட்டது.

Also Read  காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் - நடந்தது என்ன?

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இணையதளங்கள் மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்துள்ளன. இந்த திடீர் முடக்கம் காரணமாக சர்வதேச அளவில் பாஸ்ட்லி-ன் பெயர் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லேசான கொரோனா பாதிப்பு இருந்தா நல்லதுதான் – அமெரிக்க ஆய்வில் தகவல்

sathya suganthi

வீட்டில் தீ வைத்து விட்டு சேரில் அமர்ந்து வேடிக்கை பார்த்த பெண்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை…! முழு விவரம் இதோ…!

sathya suganthi

பறிக்கப்பட்டவரிடமே மீண்டும் சென்ற மகுடம்…! அவமானத்துக்கு பழி தீர்த்த இலங்கை திருமதி அழகி…!

Devaraj

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை – யுஜிசி அறிவிப்பு

Tamil Mint

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

மேகன் மார்க்கெல்லின் இனப்பாகுபாடு குறித்த பேச்சு – வைரல் ஆகும் டயானாவின் பேட்டி!

Lekha Shree

தொடர் ஏவுகணை தாக்குதல்.. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூளும் அபாயம்…

Ramya Tamil

தடுப்பூசி போட்டுக்கொண்டால் இரண்டு ஆண்டுகளில் மரணமா? உண்மை என்ன?

Lekha Shree

ஐந்தே நிமிடங்களில் கொரோனா தொடரை கண்டறியும் புதிய முறை

Tamil Mint

அமெரிக்காவில் கலவரம்; வரலாறு காணாத சம்பவம்!

Tamil Mint

“பாப் பாடகி ரிஹானா ஒரு முட்டாள்” – கங்கனா ரனாவத்

Tamil Mint