a

இசைஞானியின் பிறந்தநாள்: அவர் குறித்த சில சுவாரசியத் தகவல்கள்..!


இளையராஜா ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் 2.06.1943 இல் பிறந்தவர். அப்போது அவருடைய பெயர் டேனியல் ராசையா என்கிற ஞானதேசிகன்.

பின்னர் இயக்குனர் பஞ்சு அருணாசலம் இவரை இளையராஜா என்ற பெயருடன் அறிமுகப்படுத்தினார்.

அடுத்து இவரது அற்புதமான இசை ஆற்றலால் வியந்துபோன மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இவருக்கு ‘இசைஞானி’ என்ற பட்டத்தை வழங்கினார்.

ஒவ்வொரு கலைஞனும் தேசிய விருதுக்காக ஆண்டுக்கணக்கில் தவம் கிடக்கும் போது இசைஞானி இரண்டு முறை வெவ்வேறு காரணங்களுக்காக தனக்கு வழங்கப்பட இருந்த தேசிய விருதை மறுத்து இருக்கிறார்.

லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹார்மோனிய வாத்தியத்தை கொண்டு சிம்பொனி என்ற இசை அமைத்தார். இந்த சாதனையை நிகழ்த்திய ஒரே ஆசிய கண்டத்தை சார்ந்தவர் என்ற பெருமையோடு ‘மேஸ்ட்ரோ’ என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

பஞ்சமுகி என்று கர்நாடக செவ்வியல் ராகத்தை இவரே சொந்தமாக உருவாக்கி தந்துள்ளார். இந்திய அரசு இவரது இசைத் திறமையை பாராட்டி கடந்த 2010ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்து இருக்கிறது.

Also Read  ரசிகர்களின் சர்ச்சை கேள்விகளுக்கு யுவனின் சாந்தமான பதில்கள்…!

கடந்த 2012ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது பெற்றுள்ளார். இந்திய அரசின் தேசிய விருதினை 1985 சாகர சங்கமம், 1987 சிந்து பைரவி, 1989 ருத்ரவீணை, 2009 பழசிராஜா, 2016 தாரை தப்பட்டை போன்ற படங்களுக்காக ஐந்து முறை பெற்றுள்ளார்.

இசைஞானியின் இசை சாதனைகளுக்காக கடந்த 1994 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் 1996 இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகமும் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

இந்திய மொழிகளில் கிட்டதட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ஒரே ஆண்டில் 56 திரைப்படங்களுக்கு இசையமைத்து இருப்பது உலக அளவில் வியந்து பார்க்கப்படுகிறது.

மேலும் 450க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார். இசையைத் தவிர கவிதை, கதை, கட்டுரை மற்றும் பென்சில் ஓவியம் ஆகியவற்றில் இவருக்கு ஆர்வம் உண்டாம்.

Also Read  நடிகர் பிரபாஸின் ‘சலார்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!

தான் வரைந்த பென்சில் ஓவியங்களை இவர் ஆசையாக பிரேம் போட்டு வீட்டில் மாட்டி வைப்பாராம்.

பண்ணைபுரத்துக்காரர் என இவரை அழைப்பதையே இளையராஜா விரும்புவாராம். காரணம் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்த இவர் இன்று வரை அந்த மண்ணை மறக்காமல் வாழ்ந்து வருகிறார்.

இளையராஜாவை விட அவரது அண்ணன் பாவலர் வரதராஜன் ஒரு புரட்சி இசை கலைஞராக வாழ்ந்தவர். அந்த காலத்திலேயே ஆர்மோனிய பெட்டியை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக சென்று இசைக் கச்சேரிகளை நடத்துவாராம்.

Also Read  Couples ஆக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவுடி ஜோடிகள்…! வைரல் போட்டோ இதோ..!

அவரிடம் இசை படித்த இளையராஜா கடந்த 1958ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற ஒரு கச்சேரிக்கு அண்ணனுக்கு ஒத்தாசையாக சென்றார்.

அப்போது வரதராஜனுக்கு உடம்பு சரி இல்லாததால் அவருடைய தாய் சின்னதாய் இளையராஜாவை உடன் அனுப்பி வைத்துள்ளார்.

இப்படி ஆரம்பித்த அவரது இசைப்பயணம் என்று வரை ஓயாமல் அலையாய் பரவிக் கொண்டே இருக்கிறது.

இளையராஜாதான் பாட்டு கேட்பதற்காக வாங்கி வைத்து இருந்த ரேடியோவை விற்று தனது தம்பிகளுடன் சென்னைக்கு வந்தார்.

சென்னைக்கு வந்த இளையராஜா தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசையை கற்றுள்ளார்.

இவரது ஆர்வத்தைப் பார்த்து வியந்துபோன அவர் இளையராஜாவுக்கு ஹார்மோனியம், கீபோர்டு, புல்லாங்குழல், கிட்டார் போன்ற இசை வாத்தியங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தனுஷின் ‘கர்ணன்’ பட வெளியீடு எப்போது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ தகவலால் ரசிகர்கள் குஷி!

Tamil Mint

மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த ‘கோ’ பட நடிகையின் சகோதரர்!

Lekha Shree

“கோயிலுக்கு வந்தது போன்ற உணர்வு!” – இளையராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்!

Tamil Mint

“தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது” – இயக்குனர் சேரன்

Lekha Shree

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்த நவரசா ப்ரோமோ வெளியீடு – ரசிகர்கள் குஷி

HariHara Suthan

கோடி கணக்கில் விலை போன வலிமை பட உரிமம்..! வலிமை அப்டேட் இதோ..

Jaya Thilagan

“இயற்கை 2 எடுக்க திட்டமிட்டிருந்தோம்”- நடிகர் ஷாம்

Shanmugapriya

“தலைமையை தேர்ந்தெடுப்பது நம் விரல் மை” – அனைவரும் வாக்களிக்க நடிகர் விவேக் வேண்டுகோள்!

Shanmugapriya

பாடகருக்கு ஆதரவு – மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி…!

sathya suganthi

இசையை மையப்படுத்தும் இசைப்புயலின் புதிய அவதாரம்…

VIGNESH PERUMAL

“காதலை ஏற்காவிட்டால் தற்கொலை” – இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டில் அனிக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Shanmugapriya

விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு இந்த பிக்பாஸ் பிரபலம் நண்பரா? வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree