விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்கு – ஜனவரி 11-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு..!


நடிகர் விஜய் சேதுபதி தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை ஜனவரி 11 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன், திரைத்துறையில் நடிகராக இருந்து வரும் மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2-ம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக சந்தித்ததாகவும் திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்

மேலும், தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன் தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டார்.

Also Read  அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' பட டிரெய்லர்..!

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும் காதில் அறைந்ததாகவும் இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும் அம்மனுவில் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, உண்மை சம்பவங்கள் இப்படியிருக்க மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டி இருந்தார்.

Also Read  'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு…!

எனவே, திரைத்துறையில் இருக்கின்ற சக நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கி அது உண்மைக்கு புறம்பான செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்தார்.

நடிகர் மகாகாந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Also Read  “கர்ப்பமாக இருக்கிறேன்” புகைப்படத்துடன் நல்ல செய்தி சொன்ன பிரபல பாடகி... குவியும் வாழ்த்துக்கள்...!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல சீரியல் நடிகை தற்கொலை..! மரணகுறிப்பில் கண்கலங்க வைக்கும் காரணம்..!

Lekha Shree

“இளமை இதோ… இதோ…!” – தன் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு பாடல் மூலம் பதிலடி கொடுத்த இசைஞானி…!

Lekha Shree

சின்ன பட்ஜெட் படத்தில் விஜய்சேதுபதி வந்தது தேவையா?…. பிரபல தயாரிப்பாளரின் பரபரப்பு பேச்சு…!

Tamil Mint

சொந்தமாக வெப்சைட் தொடங்கும் பிரபல இசையமைப்பாளர்! தேதி அறிவிப்பு குறித்த சூப்பர் அப்டேட்!

Tamil Mint

சிம்புவின் மாநாடு தயார்… அரசியல் கட்சிகளின் மாநாட்டை மிஞ்சும் சிம்பு மாநாடு…

VIGNESH PERUMAL

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

ஊரக உள்ளாட்சி தேர்தல் – விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 பேர் வெற்றி?

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘Ban Netflix’ ஹேஷ்டேக்… என்ன காரணம்?

Lekha Shree

ஊரடங்கில் களத்தில் வேறுமாறி கலக்கும் இளம் நடிகை…! குவியும் வாழ்த்து…!

sathya suganthi

‘கோ’ படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…!

Lekha Shree

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??!” – வெற்றிகரமாக ரிலீசானது சிம்புவின் ‘மாநாடு’..!

Lekha Shree

இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்த அமீர்கான்.!

Lekha Shree