a

சென்னையா – மும்பையா யாருக்கு பலம் அதிகம்? வரலாறு சொல்வது என்ன?


இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் இன்றைய ஆட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுவரை ஐபிஎல் தொடரில் 32 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன இதில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் 19 முறையும் சென்னை அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் அவ்வளவாக சோபிக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு முறையும் மும்பை இந்தியன்ஸ் இடம் தோல்வியைத் தழுவி அதிர்ச்சி கொடுத்தது.

Also Read  நடராஜனை கொண்ட இந்திய அணி தோற்றதாக சரித்திரம் இல்லை!

இரு அணிகளை ஒப்பிடும்போது கடந்த சீசனில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை குவித்த வீரர்களில் முதல் மூன்று தரவரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

இஷான் கிஷன், டி காக், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கிலும் டிரென்ட் போல்ட், பும்ரா, ராகுல் சஹர் பவுலிங்கிலும் சிறந்து விளங்கியுள்ளனர்.

Also Read  ஐசிசி பிப்ரவரி மாத விருது - பரிசீலனை பட்டியலில் இந்திய வீரர் அஷ்வின்!

அதேசமயம் ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, எம்எஸ் தோனி ஆகியோர் அதிக ரன்களை விளாசி உள்ளனர். பவுலிங்கில் லசித் மலிங்கா பிராவோ ஹர்பஜன்சிங் ஆகியோர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

அணியில் பெரிய மாற்றம் ஏதும் இன்றி கடந்த சீசனை போன்றே இந்த முறையும் இரு அணிகளும் களம் காண்கின்றன. மும்பை – சென்னை அணிகள் நேருக்கு நேர் மோதிய கடைசி 5 ஆட்டங்களில் நான்கில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியை வசப்படுத்தியுள்ளது.

Also Read  நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... போட்டியில் நுழைந்ததா இந்தியா...!

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி!

Lekha Shree

ராஜஸ்தான் – பஞ்சாப் இன்று பலப்பரிட்சை!

Jaya Thilagan

இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ஹைட்ராபாத் அணி வென்றது. குவாலிபயர் போட்டிக்கு முன்னேறியது

Tamil Mint

சுழற்பந்து வீச்சை சமாளிக்கும் திறன் இந்த அணிக்கு இல்லை: சேப்பல் சாடல்!

Lekha Shree

அகமதாபாத் டெஸ்ட் போட்டி: 294 ரன்கள் குவித்த இந்திய அணி; சதம் விளாசி ரிஷப் பந்த் அசத்தல்!

Lekha Shree

ஒரு ரன்னில் டெல்லி கேப்பிடல்ஸ் தோல்வி – அதிர்ச்சி கொடுத்த ஆர்.சி.பி.

Jaya Thilagan

மொயின் அலியை படுமோசமாக விமர்சித்த தஸ்லிமா நஸ்ரின் – வலுக்கும் கண்டனங்கள்!!

Jaya Thilagan

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல் ரவுண்டர்! காரணம் இதுதான்!

Lekha Shree

தோனியை கை காட்டியது சச்சின்! – மனம் திறந்த சரத்பவார்!

Lekha Shree

“2021 ஐபிஎல் தொடரை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும்” – தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி. ராமராவ்

Lekha Shree

கோலி அதிரடி வீண் – இங்கிலாந்து அசத்தல் வெற்றி

Devaraj

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு!

Lekha Shree