a

சென்னை – மும்பை இன்று பலப்பரிட்சை!


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27 வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. டெல்லியில் நடைபெறும் இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றிகண்டு பலம் வாய்ந்த அணியாக வலம் வருகிறது. கடந்த ஐந்து போட்டிகளில் எல்லாமே வெற்றியை பதிவு செய்த சென்னை அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மாஸ் காட்டி வருகிறது.

Also Read  ஐபிஎல் திருவிழா இன்று முதல் தொடக்கம்!

பேட்டிங்கில் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட், டு பிலெஸிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். ஜடேஜா, சாம் கரன், மொயின் அலி ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக ஜொலித்து வருகின்றனர்.

சுவாரசியமாக விளையாடும் சென்னை அணி இந்த முறை மும்பையை வீழ்த்தி தரவரிசையில் முதலிடத்தை தக்க வைக்க முனைப்போடு களமிறங்கும்.

Also Read  குருவை வீழ்த்த புது டெக்னிக் - சொல்கிறார் ரிஷப் பண்ட்!

அதே சமயம் நடப்புச் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் கடுமையாக திணறி வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி மூன்றில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் கண்டுள்ளது.

ரோகித் சர்மா, டி காக், ஹர்திக் பாண்டியா இஷான் கிஷன், குருனால், சூர்யகுமார் யாதவ், போலார்ட், பும்ரா, ஸ்டார்க் என அதிரடி படங்கள் நிறைந்த அணியாக காணப்பட்டாலும் எதிரணியை சமாளிப்பதில் திணறுகிறது.

Also Read  சென்னை சூப்பர் கிங்சுக்கு மற்றும் ஒரு வாய்ப்பு - சென்னையை சமாளிக்குமா ஐதராபாத்?

பேட்டிங்கில் 1, 2 வீரர்கள் மட்டுமே கணிசமாக ரன்களை குவிக்கின்றனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறுவது அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

பலம் வாய்ந்த சென்னை அணியை சமாளிப்பது மும்பை அணிக்கு கடும் சவாலாக இருந்தாலும் போட்டியை வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல் 2021: சென்னை-டெல்லி இன்று பலப்பரீட்சை! வெற்றியை சுவைக்குமா சிஎஸ்கே?

Lekha Shree

கடின உழைப்பால் மீண்டெழுந்தேன் – சொல்கிறார் பிரித்வி ஷா!

Jaya Thilagan

ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு தொடரும் சோதனை!

Lekha Shree

பெங்களூரா..ஐதாராபாத்தா..ஐபிஎல்லில் யாருக்கு பலம் அதிகம்?

Devaraj

ஐபிஎல் 2021: சென்னை அணியில் மூவருக்கு கொரோனா!

Lekha Shree

ஐதராபாத்க்கு வந்த சோதனை – சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற டெல்லி அணி!

Jaya Thilagan

என்னை யாரும் குறை சொல்லக்கூடாது – எம்.எஸ். தோனி ஓபன் டாக்!

Jaya Thilagan

ராஜஸ்தானில் இருந்து கழன்ற மற்றொரு வீரர் – நெருக்கடியில் சஞ்சு சாம்சன்!

Devaraj

ஐபில் தொடரில் அதிவேக சதம் – தெறிக்க விட்ட வீரர்களின் பட்டியல்

Jaya Thilagan

டெல்லி அணியின் கேப்டன் ஆகிறார் இந்திய அணியின் வளரும் நட்சத்திரம்!

HariHara Suthan

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று மோதல் – வெற்றி யாருக்கு?

Devaraj

போர்களமான வான்கடே – வெற்றியை பறித்த சி.எஸ்.கே!

Jaya Thilagan