சிஎஸ்கே அணியின் முதன்மை ஸ்பான்சரான பிரபல நிறுவனம்..! எவ்வளவு தொகை தெரியுமா?


ஐபிஎல் 2022 தொடர் சென்னையில் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கலாம் என்று தெரியவந்துள்ளது. அகமதாபாத், லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் தொடர் 60 நாட்களை தாண்டி நடைபெறும் என கூறப்படுகிறது.

ஐபிஎல் 2022 தொடரின் கால அட்டவணை இன்னும் தயார் ஆகவில்லை என்றாலும் பிசிசிஐ அணிகளுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

Also Read  ஐபிஎல் அணிகளும்...! இணைய ரசிகர்களும்...!

ஐபிஎல் 2021 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியை நடத்தும் உரிமையை பெற்று உள்ளதால் சென்னையில் முதல் போட்டி நடைபெறும். எதிரணி வழக்கம்போல் மும்பை இந்தியன்ஸ் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2022ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் முதன்மை ஸ்பான்சராக பிரபல நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Also Read  ஒலிம்பிக் 2020: இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி..!

இரண்டு மற்றும் மூண்று சக்கர வாகன டயர் உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் யூரோகிரிப் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் முதன்மை ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தத் தொகை ரூ. 100 கோடியை தாண்டியுள்ளது.

ஐபிஎல் தொடரில் தோனி தலைமை வகிக்கும் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ். டிவிஎஸ் யூரோகிரிப் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Also Read  டி20 உலகக்கோப்பை: இஷான் கிஷன் அதிரடியால் இந்தியா வெற்றி…!

சிஎஸ்கே அணியின் ஜெர்சியில் இனி டிவிஎஸ் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். இதுதான் டிவிஎஸ் குழுமம் முதல் முறையாக ஐபிஎல் அணியின் ஸ்பான்சராகியுள்ள தருணம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆசியாவிலேயே கோலி தான் டாப் : குஷியில் ரசிகர்கள்

suma lekha

இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது

Tamil Mint

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்…! வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

ஐசிசி பிப்ரவரி மாத விருது – பரிசீலனை பட்டியலில் இந்திய வீரர் அஷ்வின்!

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: துப்பாக்கி சுடுதல் அணியில் தமிழக வீராங்கனை தேர்வு!

Lekha Shree

இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி – பட்டாசு வெடித்து கொண்டாடிய இருவர்! காரணம் இதுதான்!

Lekha Shree

மருத்துவமனையில் ஸ்ரேயாஸ் ஐயர்? பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்!

Lekha Shree

ஜெர்ஸியை மாத்துங்கனு கடைசி நேரத்துல வந்து சொல்றாங்க: மேரிகோம் ஆதங்கம்

mani maran

வித்தியாசமான பௌலிங் ஆக்சன் – வியந்துபோன ஹர்பஜன் சிங்

Jaya Thilagan

மெல்பர்ன்: இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய 2 ஆவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரஹானே சதம் விளாசினார்!

Tamil Mint

ஐசிசியின் கனவு அணியில் மூன்று விதமான போட்டிகளுக்கும் இந்திய வீரர்களே கேப்டன்!!

Tamil Mint

கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் – விராட் கோலி அட்வைஸ்!

Devaraj