ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணியில் ரெய்னாவுக்கு நோ? கசிந்த தகவல்..!


ஐபிஎல் 2022 தொடர் சென்னையில் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கலாம் என்று தெரியவந்துள்ளது. அகமதாபாத், லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் தொடர் 60 நாட்களை தாண்டி நடைபெறும் என கூறப்படுகிறது.

ஐபிஎல் 2022 தொடரின் கால அட்டவணை இன்னும் தயார் ஆகவில்லை என்றாலும் பிசிசிஐ அணிகளுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

Also Read  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்…!

ஐபிஎல் 2021 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியை நடத்தும் உரிமையை பெற்று உள்ளதால் சென்னையில் முதல் போட்டி நடைபெறும். எதிரணி வழக்கம்போல் மும்பை இந்தியன்ஸ் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் 2022 ஐபிஎல் சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஐபிஎல் அணிகள் எந்த வீரர்களை தக்க வைக்க உள்ளது, யாரை விடுவிக்க உள்ளது என்பது குறித்த யுகங்கள் உலா வருகின்றன.

Also Read  2வது ஒருநாள் போட்டி - இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 337 ரன்கள் நிர்ணயம்!

இந்த நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்கவைத்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தோனி தான் சென்னை அணியின் முதல் சாய்ஸ் என கூறப்படுகிறது. அதேபோல் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தோனியுடன் ருதுராஜ், டூப்லஸிஸ், ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் யூகிக்கப்படுகிறது.

Also Read  ஜடேஜா வேற லெவல்…. புகழ்ந்து தள்ளிய மைக்கேல் வாஹ்ன்!..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சாம் கர்ரணை புகழ்ந்த இந்திய தொழிலதிபர்!

Lekha Shree

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய அஸ்வின்! – வைரலாகும் வீடியோ!

Tamil Mint

உலக கோப்பைக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்க வேண்டும் – சுனில் கவாஸ்கர் கருத்து

suma lekha

ஐபிஎல் 2022: புதிய அணிகளுக்கான ஏலம் நிறைவு…!

Lekha Shree

இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்புக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree

தேவஸ்தான கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஐபிஎல் கோப்பை…!

Lekha Shree

நெய்மருக்கு கொரோனா, அதிர்ச்சியில் அணி

Tamil Mint

100 மில்லியன்: முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்ற விராட் கோலி!

Jaya Thilagan

மீண்டு வருவாரா கேன் வில்லியம்சன்? – நியூசிலாந்து அணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

HariHara Suthan

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் பென் ஸ்டோக்ஸ்!

suma lekha

சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை ஊதித் தள்ளிய ராஜஸ்தான் இளம் படை.!

suma lekha