ஐபிஎல் 2022: இரு புதிய அணிகளுக்கான டெண்டர் ஆகஸ்டில் துவக்கம்!


ஐபிஎல் 2022 போட்டிகளில் 10 அணிகள் இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான இரண்டு புதிய அணிகளுகளின் டெண்டர் செயல்முறை ஆகஸ்ட் நடுப்பகுதியில் தொடங்கும் எனவும் இரண்டு புதிய உரிமையாளர்களும் அக்டோபர் நடுப்பகுதியில் இறுதி செய்யப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் 4 வீரர்களை தக்கவைத்துகொள்ள உரிமையாளர்களுக்கு அனுமதி உண்டு.

அந்த வகையில் ஐபிஎல் 2022 போட்டிகளில் 3 இந்திய வீரர்கள், 1 வெளிநாட்டு வீரர் அல்லது 2 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் என தக்க வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Also Read  கொலை குற்றம் - மல்யுத்த வீரர் சுஷில் குமார் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்!

இச்செய்தி வெளியானதில் இருந்தே பல கிரிக்கெட் ரசிகர்கள் அவர்களின் பேவரைட் அணியில் எந்தெந்த வீரர்கள் தக்கவைத்தால் நன்றாக இருக்கும் என கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 14வது ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்தார்.

Also Read  இந்தியா VS இலங்கை: முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்!!

மீதமுள்ள 31 போட்டிகளையும் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டி20 உலக கோப்பை தொடர் அகிடோபர் 17ம் தேதி தொடங்கவுள்ளதால் அதற்கு முன்னர் இப்போட்டிகள் நடத்தப்படுமா அல்லது டி20 உலக கோப்பை தொடருக்கு பின் நடத்தப்படுமா என ஐபிஎல் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Also Read  ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா அணி: இலங்கை அணியுடன் இன்று கடைசி ஒருநாள் போட்டி

இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான அப்டேட் வெளியானதும் அதை கொண்டாட துவங்கிவிட்டனர் ஐபிஎல் ரசிகர்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக களமிறங்கும் ராகுல் டிராவிட்…!

Lekha Shree

3ம் நிலை வீரராக களமிறங்கி 10,000 ரன்களை குவித்து விராட் கோலி சாதனை!

Lekha Shree

இனவெறி சீண்டலால் சீறிய விராட் கோலி… என்னா ‘ரவுடித்தனம்’?

Tamil Mint

ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா அணியை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி!

Jaya Thilagan

சிஎஸ்கே வெற்றி, பஞ்சாப் பிளேஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறியது

Tamil Mint

“மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” – பிசிசிஐ துணை தலைவர்

Lekha Shree

அக்டோபர் 17ம் தேதி தொடங்குகிறது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள்?

Lekha Shree

கோல் மழை பொழிந்த யுஏஇ – இந்திய கால்பந்து அணி படுதோல்வி!

HariHara Suthan

ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு; சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம ஷாக் நியூஸ் இருக்கு!

Bhuvaneshwari Velmurugan

ரொனால்டோ பாணியை பின்பற்றிய பிரான்ஸ் கால்பந்து வீரர் போக்பா…!

Lekha Shree

சிஎஸ்கே கேப்டன் தோனி புதிய சாதனை! என்ன தெரியுமா?

Tamil Mint

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம்!

Tamil Mint