ஐபிஎல் 2022: அகமதாபாத் மற்றும் லக்னோ புதிய அணிகளாக அறிவிப்பு!


2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப்பட உள்ள இரு அணிகளுக்கான ஏலம் முடிவடைந்ததை அடுத்து இந்த 2 அணிகள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

அதன்படி, தற்போது அகமதாபாத் மற்றும் லக்னோ புதிய அணிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியன் பிரிமியர் லீக் 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல நாட்டு வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட இந்த களம் மிகவும் பயனுள்ளதாக அமைந்த அதேவேளையில் உள்ளூர் வீரர்கள் தங்களது திறமையை காட்ட ஒரு மேடையாக இது அமைந்துள்ளது.

சொல்லப் போனால், உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் போட்டி பரபரப்பாக பேசப்படும் ஒரு போட்டியாக உருவெடுத்து இதற்கு ஒரு முக்கிய காரணமும் ஐபிஎல் தான்.

Also Read  கொல்கத்தாவை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

இந்தியாவின் பிரம்மாண்ட டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டியில் தற்போது 8 அணிகள் ஆடி வருகின்றன.

நடந்து முடிந்த ஐ.பி.எல் 14 வது சீசனில் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி கோப்பையை தன் வசப்படுத்தியது.

இதற்கிடையே 2022 ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக பல நாட்களாக ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிசிசிஐ புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்படும் விவரத்தை வெளிப்படையாக அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான நொடி முதலே புதிதாக சேர்க்கப்படும் அணிகள் எவை என்ற கேள்வி அனைவர் மனதிலும் தொற்றிக் கொண்டது. இந்த நிலையில்தான் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இரு அணிகளை முடிவு செய்வதற்கான ஏலம் துபாயில் நடைபெற்றது.

Also Read  ஐபிஎல் 2022: புதிய அணியை வாங்கும் மேன்செஸ்டர் யுனைடெட்?

உலக அளவில் கால்பந்து, கூடைப்பந்து மற்றும் பேஸ்பால் போன்றவையே பணம் கொழிக்கும் விளையாட்டுப் போட்டிகளாக உலக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

ஆனால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வர்த்தகம் பல கோடி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு என உலகின் டாப் டென் விளையாட்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது ஐபிஎல்.

இத்தனை பெருமை வாய்ந்த ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப்பட உள்ள அணைகளை வாங்க அதானி, ஜிண்டல் பவர் அண்டு ஸ்டீல், கோட்டாக் குழுமம், இந்துஸ்தான் டைம்ஸ் என முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வரிசையில் நிற்கின்றன.

போதாக்குறைக்கு உலகப் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான மன்சஸ்டர் யுனைட்டடும் இந்த ஏலத்தில் குதித்திருப்பது உலக அளவில் ஐபிஎல் கவனத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்வதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

Also Read  6 பால் 6 சிக்ஸ் - இலங்கையை போட்டுத் தாக்கிய போலார்ட்!

இதனால் ஒவ்வொரு அணிக்கும் 2000 கோடி ரூபாய் அடிப்படை விலையாக ஐபிஎல் நிர்வாகம் நினைத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த ஏலத்தின் மூலம் பிசிசிஐ சுமார் 10 ஆயிரம் கோடிகளுக்கு மேல் அள்ளுவதற்கு வாய்ப்பு இருப்பதாக முனு முனுக்கப்பட்டது.

தற்போது நடைபெற்ற இந்த ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற தகவல் வெளியே கசிந்துள்ளது.

புதிதாக அறிமுகமாகவுள்ள இரு அணிகளின் ஏலம் இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அகமதாபாத் மற்றும் லக்னோ புதிய அணிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் CVC Capital 5166 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் RPSG குழுமம் 7090 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியையும் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008-ம் ஆண்டு மும்பை அணியை அதிகபட்சமாக முகேஷ் அம்பானி 450 கோடி ரூபாய்க்கு வாங்கினார். ஆனால் தற்போது அந்தத் தொகை அதை விடப் பத்து மடங்கு உயர்ந்துள்ளதுஇந்தப் போட்டிக்கு ஒரு உதாரணம்.

புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் அடுத்து ஐபிஎல் தொடரில் சுவாரசியம் கூடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா மொத்த பாதிப்பில் ரஷ்யாவை முந்தியது மகாராஷ்டிரா:

Tamil Mint

திருமண விருந்தில் ஆட்டுக்கறி இல்லை! – மணமகளையே மாற்றிய மணமகன்!

Shanmugapriya

சிஎஸ்கே கேப்டன் தோனி புதிய சாதனை! என்ன தெரியுமா?

Tamil Mint

கடைசி போட்டியில் கலக்கிய இந்தியா: நமீபியாவை நச்சுனு அடிச்சி அசத்தல் வெற்றி.!

suma lekha

எல்லாம் சரிதான் ஆனால் நாட்டுக்காக விளையாடுறது ரொம்ப முக்கியம் பாஸ் – இங்கிலாந்து கிரிக்கெட் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட்!

Jaya Thilagan

கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட இதுதான் காரணமா?

Lekha Shree

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு..!

Lekha Shree

தகவல்களை திருட வாய்ப்பு – வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு எச்சரிக்கை…!

Devaraj

அயோத்தி ராமருக்கே விபூதியடித்த ஆசாமிகள் – ரூ. 22 கோடி ஸ்வாகா…!

Devaraj

“நூறாண்டுகள் கண்டிராத ஒரு பெருந்தொற்று கொரோனா” – பிரதமர் மோடி

Lekha Shree

இந்தியாவின் தவறான வரைபடம் – ட்விட்டர் நிர்வாகி மீது வழக்கு பதிவு!

Lekha Shree

முன்னாள் தலைமை நீதிபதியும் -மொழிப்போர் நெட்டிசன்களும்

Tamil Mint