a

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று மோதல் – வெற்றி யாருக்கு?


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக 45 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமாக வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதே உற்சாகத்துடன் இந்த முறையும் களமிறங்குகிறது.

தொடக்க ஆட்டக்காரரான ருத்துராஜ் கெய்க்வாட் கடுமையாக திணறும் நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லுங்கி நிகிடி தனிமைப்படுத்தலுக்கு பின்னர் அணியில் இணைந்துள்ளதால் பிராவோவுக்கு பதில் அவர் களமிறக்கப்படலாம்.

Also Read  டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் விட்டுவைக்காத கொரோனா!

பேட்ஸ்மேன்கள் கனகச்சிதமாக தங்கள் பங்கை சரியாக செய்து வருவதால் கடந்த முறை விளையாடிய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடினால் எதிரணிக்கு கூடுதல் நெருக்கடி அளிக்க முடியும். கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை 3 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே கண்டுள்ளது.

கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட கொல்கத்தா அணி, இந்த முறை வெற்றி பெற வேண்டிய முனைப்பில் களமிறங்குகிறது.

இதுவரை விளையாடிய போட்டிகள் அனைத்தும் சென்னையில் இருந்த நிலையில் முதல் முறையாக மும்பை வான்கடே வில் கொல்கத்தா களம் காண்கிறது. கொல்கத்தா ஆடுகளம் சாதகமாக இருக்கக்கூடும் என்பதால் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக சிவம் மாவிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

Also Read  கொரோனா பரவல் - ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்!

இதேபோல் சூழல் நட்சத்திரம் சுனில் நரேன் சாகிப் அல் ஹசனுக்கு பதிலாக அணியில் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே எதிராக மட்டும் சுனில் நரேன் 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளதால் அவரை கொல்கத்தா அணி நிச்சயம் பயன்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் களம் கண்டுள்ள இரு அணிகளில் சென்னை அணி அதிகபட்சமாக 14 முறையும் கொல்கத்தா அணி 8 முறையும் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லை.

Also Read  விக்கெட் கீப்பிங்களில் சாதனை படைத்த நமன் ஓஜா ஒய்வு - கண்ணீர் மல்க அறிவிப்பு

உலகின் தலைசிறந்த கேப்டன்களான எம்எஸ் தோனி – இயான் மார்கன் தலைமையில் இன்றைய ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஷாக் கொடுத்த தோனி அவுட்!

Tamil Mint

ஸ்மிருதி மந்தனாவின் சாதனை – பதிலடி கொடுத்த இந்திய மகளிர் அணி

Jaya Thilagan

ஐபிஎல்லில் கொரோனா – என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?

Devaraj

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணி அசத்தல்!

Lekha Shree

ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போர்; மனங்களை வென்ற சஞ்சு சாம்சன்!

Devaraj

இந்தியாவை 145 ரன்களுக்கு சுருட்டிய ஜோ ரூட்! 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்!

Lekha Shree

ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு தொடரும் சோதனை!

Lekha Shree

சாம் கர்ரணை புகழ்ந்த இந்திய தொழிலதிபர்!

Lekha Shree

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது; ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார் பிரித்வி ஷா!

Tamil Mint

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்… களத்தில் நின்று ஆடும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்!

Tamil Mint

4-வது டெஸ்ட் போட்டி: 4 விக்கெட்டுகள் இழந்து இங்கிலாந்து அணி திணறல்!

Lekha Shree

அசுர வேகத்தில் வந்த பவுன்சர் பந்து – இரு துண்டாக உடைந்து விழுந்த ஹெல்மெட்!

Jaya Thilagan