a

பஞ்சாபை சமாளிக்குமா ஐதராபாத்?


ஐபிஎல் தொடரின் 14வது ஆட்டத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

நடப்பு தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இரண்டில் தோல்வி கண்டுள்ளது.

அதேசமயம் ஐதராபாத் அணி 3 ல் விளையாடி 3 போட்டியையும் கோட்டை விட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஐதராபாத் களமிறங்குகிறது.

ஐதராபாத் அணியை பொறுத்தவரை டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் மட்டுமே அதிரடி காட்டுகின்றனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறும் போது வெற்றியை அந்த அணி நழுவ விடுகிறது.

Also Read  மும்பையை வீழ்த்தி டெல்லி கேப்பிடல் அசத்தல் வெற்றி!

பந்துவீச்சில் கடைசி ஆட்டத்தில் நடராஜன் அணியில் சேர்க்கப்படாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை களமிறக்கப்படாத கேன் வில்லியம்சன் இந்த முறை கட்டாயம் ஆட்டத்தில் பயன்படுத்தினால் மட்டுமே ஐதராபாத் அணிக்கு வெற்றி சாதகமாகும்.

Also Read  ஐபிஎல் தொடரில் இருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள்…! ரசிகர்கள் ஏமாற்றம்…!

பஞ்சாப் அணியை பொருத்தவரை கே எல் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில் என மிரட்டலான பேட்ஸ்மேன்களை கொண்டிருந்தாலும் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்குகிறது.

முக்கிய விக்கெட்டுகளை பஞ்சாப் அணி பவர் பிளேயில் எடுத்தால் மட்டுமே எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். தோல்வியிலிருந்து மீள பஞ்சாப்பும் முதல் வெற்றியை பதிவு செய்ய ஐதராபாத் அணியும் மோதுவதால் இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  ஐபிஎல் 2021: தோனி அண்ட் கோ டீம் படைக்க உள்ள சூப்பர் சாதனைகள்!

இதுவரை 16 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் களம் கண்டுள்ள நிலையில் அதிகபட்சமாக 11 போட்டிகளில் ஐதராபாத் அணியும் 5 போட்டிகளில் மட்டுமே பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து ஜாம்பவான் மெக்ராத்தின் வளர்ப்பு பிரசித் கிருஷ்ணா…!

Lekha Shree

சிஎஸ்கே வின் மெர்சல் ஆட்டம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி!

Jaya Thilagan

இங்கிலாந்தின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்… எழும் எதிர்ப்புகள்; ஸ்டோக்ஸ் சொன்ன பன்ச்!!

Tamil Mint

சன் ரைசர்ஸ் அணியை மிரட்டிய டிஆர்எஸ் எம்.எல்.ஏ..! காரணம் இதுதான்!

Jaya Thilagan

ராஜஸ்தானுக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

Devaraj

தோனியின் முதல் சதம்!

Jaya Thilagan

சச்சின்,லாரா நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே தரலாம்! கலாய்த்த யுவராஜ் சிங்..வைரல் வீடியோ இதோ

HariHara Suthan

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தை புகழ்ந்த ரவி சாஸ்திரி!

Lekha Shree

ஐபிஎல்லில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர்கள்!

Jaya Thilagan

மாற்று வீரர்களை வாங்க முடியாமல் திணறும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

Devaraj

அம்பயர் நிதின் மேனனுக்கு குவியும் பாராட்டு!

HariHara Suthan

விராட் கோலி, அனுஷ்கா சர்மா குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்! – ஆச்சரியத்தில் மூழ்கிய இணையவாசிகள்!

Shanmugapriya