a

கொல்கத்தாவை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!


விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய தொடக்க ஆட்டக்காரர்களாக கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா – கில் ஆகியோர் களமிறங்கினர்.

நிதானமாக விளையாடி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 24 ரன்கள் சேர்க்க கில் தவறுதலாக ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து நிதிஷ் ராணா 22 ரன்களிலும் ராகுல் திரிபாதி 36 ரன்களிலும் விடைபெற்றனர்.

சுனில் நரைன் 6 ரன்களில் அவுட் ஆக கேப்டன் இயான் மார்கன் பந்துகள் எதையுமே சந்திக்காமல் கிறிஸ் மோரிஸ் வசம் சிக்கிக் ரன் அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக், ஆன்ட்ரே ரசல், பேட் கம்மின்ஸ் ஆகிய மூவரும் அவ்வளவாக சோபிக்கவில்லை.

Also Read  கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளித்த விராட் கோலி-அனுஷ்கா தம்பதி…!

ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது.

ராஜஸ்தானை பொருத்தவரை கிறிஸ் மோரிஸ் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 21ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது.

ஜாஸ் பட்லர் 5 ரன்களில் விடைபெற அவரைத் தொடர்ந்து வந்த ஜெய்ஸ்வால் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்கு நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

41 பந்துகளை எதிர்கொண்ட அவர் இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 42 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரை தொடர்ந்து வந்த வீரர்களும் கணிசமாக ரன் சேர்க்க ராஜஸ்தான் அணி18-வது ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றியை வசப்படுத்தியது.

Also Read  ஐபிஎல் 2021: சென்னை அணியில் மூவருக்கு கொரோனா!

கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிறப்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மார்கன், போட்டியின் தொடக்கம் முதலே பேட்ஸ்மேன்கள் சரிவர ஆட முடியவில்லை என்றும் 40 ரன்கள் குறைவாகவே தங்களால் இலக்கை நிர்ணயிக்க முடிந்ததாகவும் வருத்தம் தெரிவித்தார்.

Also Read  "நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" - அதிரடி காட்டிய பீட்டர்சன்!

முறையான ஜோடி அமையாதது தோல்விக்கு காரணம் என கூறிய மார்கன், எதிர்வரும் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும் நிலையில் ஆடுகளங்களின் மாற்றத்தால் அணி புதிய உத்வேகம் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடம் வகிக்கிறது. எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நாளை பஞ்சாப் கிங்ஸ் அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல் ஏலத்தில் கண்டுகொள்ளப்படாத கான்வேயை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்…!

Jaya Thilagan

மகாராஷ்டிராவில் ஊரடங்கு – ஐபிஎல் க்கு தடை வராது என கங்குலி உத்தரவாதம்!

Jaya Thilagan

இன்று முதல் சென்னையில் தோனி தலைமை யிலான சிஎஸ்கே அணி ஒரு வார பயிற்சி

Tamil Mint

சென்னை அணி தோல்விக்கு தோனி காரணம்?

Jaya Thilagan

வேணும்னு பண்ணல.. மொகாலியில் ஐபிஎல் நடத்தாததற்கு இதுதான் காரணம்! வாய்திறந்த பிசிசிஐ

Jaya Thilagan

மீண்டு வருவாரா கேன் வில்லியம்சன்? – நியூசிலாந்து அணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

HariHara Suthan

இர்பான் பதானுக்கு கொரோனா உறுதி! சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்ற நான்கு பேருக்கு கொரோனா..

HariHara Suthan

ரஜினியை வைத்து சின்னப்புள்ள தனமாக ட்விட்டரில் சண்டைபோட்ட சென்னை-ராஜஸ்தான் அணிகள்…!

Lekha Shree

சாதனை படைத்த சமான் – சர்ச்சையை கிளப்பிய டி காக்!

Jaya Thilagan

காலையில் ஐசிசி தரவரிசையில் முதலிடம் – மாலையில் தென் ஆப்பிரிக்காவை பொளந்து கட்டிய பாபர் ஆசாம்!

Lekha Shree

சென்னையா – மும்பையா யாருக்கு பலம் அதிகம்? வரலாறு சொல்வது என்ன?

Devaraj

ஐபிஎல் 2021: பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு!

Lekha Shree