a

ராஜஸ்தானுக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!


மும்பை வான்கடேவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் களம் கண்டன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய தொடக்க ஆட்டக்காரர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட் – டு பிலெஸிஸ் ஆகியோர் களமிறங்கினர்.

Also Read  அட கேன் வில்லியம்சன இறக்கி விடுங்கப்பா!

கெய்க்வாட் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க திணறிய நிலையில் 13 பந்துகளில் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார்.

பின்னர் வந்த மொயின் அலி அதிரடியாக விளையாட 26 ரன்களும் அவரை தொடர்ந்து டு பிலெஸிஸ் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சுரேஷ் ரெய்னா 18 ரன்களில் விடைபெற அம்பத்தி ராயுடு 27 ரன்கள் குவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எம்எஸ் தோனி 17 பந்துகளில் 2 பவுண்டரி கள் மட்டுமே விளாசி 18 ரன்கள் எடுத்து விடைபெற்றார்.

சாம் கரண் – பிராவோ ஆகியோர் தங்கள் பங்கிற்கு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை சேர்த்தது.

Also Read  பொலந்து கட்டிய மேக்ஸ்வெல் - டி வில்லியர்ஸ்!


ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை சக்காரியா அதிகபட்சமாக 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 36 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கி விளையாடி வருகிறது.

Also Read  இது தான் கடைசி; மேரிகோம் அறிவிப்பால் அதிர்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று முதல் சென்னையில் தோனி தலைமை யிலான சிஎஸ்கே அணி ஒரு வார பயிற்சி

Tamil Mint

தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ…!

Lekha Shree

ஐசிசி பிப்ரவரி மாத விருது – பரிசீலனை பட்டியலில் இந்திய வீரர் அஷ்வின்!

Lekha Shree

பார்சிலோனாவை தோற்கடித்த ரியல் மேட்ரிட் – அனல் பறந்த EL Clasico கால்பந்து ஆட்டம்!

Devaraj

பெருமிதம் கொள்ளும் சாம் கரன்… ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்… இங்கிலாந்து அணி செல்லும் சுட்டிக் குழந்தை…

VIGNESH PERUMAL

கிரிக்கெட் போட்டியில் கால்பந்து விளையாடி ரன் அவுட் செய்த நியூசிலாந்து வீரர்!

Lekha Shree

சதத்தால் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

Devaraj

திருப்பி கொடுத்த இங்கிலாந்து – படு தோல்வி அடைந்த இந்தியா!

Lekha Shree

வாழ்வா சாவா ஆட்டம்! – சவாலை சமாளிக்குமா இந்திய அணி?

Lekha Shree

பொல்லார்டை ஒப்பிட்டு தமிழக வீரரை பாராட்டிய அனில் கும்ப்ளே!

Jaya Thilagan

ஆடுகளத்தில் ‘தல’ தோனியை மிரட்டிய சிஎஸ்கே இளம் வீரர்!

Lekha Shree

ஒரு ரன்னில் டெல்லி கேப்பிடல்ஸ் தோல்வி – அதிர்ச்சி கொடுத்த ஆர்.சி.பி.

Jaya Thilagan