“அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையீடு ஏன்?” – தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு விளக்கம்!


அண்மையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு எழுதிய கடிதம் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவின் கடிதத்தில், “திட்டங்களை அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பவர்பாயிண்டில் தயார் செய்து வைக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் நல திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத்துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும். ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியப்படுத்தப்படும்” என்று கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பு வெளியானதும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசின் திட்டங்களை ஆய்வுசெய்ய எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Also Read  தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு! - கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவது ஏன் என்ற கேள்வி எழுந்து, அது விவாதப்பொருளாக மாறிய நிலையில், இது தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, “அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன்.

திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து இதுபோல் தகவல்களை திரட்டி வைத்துக் கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானது தான்.

Also Read  தமிழகத்தில் தளர்வுகள் அறிவிப்பு…!

அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல. அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று தான் என்பது தெரியும்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“மத்திய அரசின் திட்டங்களைத்தான் தொலைநோக்கு திட்டமாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்!” – எல்.முருகன்

Shanmugapriya

“எல்லாரும் என்னை ஏமாத்திட்டீங்க..” ம.நீ.ம. நிர்வாகிகளிடம் கமல் ஆவேசம்

Ramya Tamil

நில மோசடி வழக்கில் பிஷப் கைது

Tamil Mint

எடப்பாடி தொகுதியில் ஸ்டாலின்…! ஸ்டாலின் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி…! முழு விவரம் உள்ளே…!

Devaraj

அதிமுக கூட்டணியில் பாமக? வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு?

Tamil Mint

“சுயநலமிகளை புரிந்துகொள்வோம்” – ‘ஜெய் பீம்’ குறித்து ஹெச்.ராஜா பதிவு… லைக் போட்ட சூர்யா..!

Lekha Shree

தமிழக தேர்தல் முடிவுகள்.. எந்தெந்த அமைச்சர்கள் முன்னிலை..? யாரெல்லாம் பின்னடைவு..?

Ramya Tamil

இந்த நம்பர் இருந்தா போதும்… தேர்தல் பற்றிய புகார்கள் தெரிவிக்க…

Jaya Thilagan

பொள்ளாச்சி உணவகத்தில் காதலர் தினத்தை கொண்டாடிய காஜல் அகர்வால்

Tamil Mint

எச்சில் இலை போல என்னை தூக்கி எறிந்தது எதற்காக? – தோப்பு வெங்கடாசலம் கண்ணீர் பேட்டி

Shanmugapriya

ஜெயலலிதாவை அடுத்து உருவாகிறது எம்.ஜி.ஆரின் பயோபிக்?

Lekha Shree

வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு; பாதி கிணறு தாண்டிய பாமக

Bhuvaneshwari Velmurugan