a

தமிழகத்தில் கொரோனா தீவிரமடைய தேர்தல் பிரச்சாரம் காரணமா?


நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் ஓரளவு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பிற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிய சூழலில் கூட, தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை போதிய அளவில் இருக்கிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

அதேநேரம், தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நடைபெற்ற காலகட்டத்தில், கொரோனா விதிமுறைகளை அரசியல் கட்சிகள் காற்றில் பறக்க விட்ட போது சுகாதாரத்துறை அதிகாரிகள் வாய் மூடி மவுனமாக இருந்து விட்டதாக சமூக வலைதளங்களில் சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

அண்மையில், இரு சக்கர வாகனத்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற பெண்ணை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் அபராதம் விதிக்க முயன்ற போது அந்தப் பெண், காவலர்களை தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விசாரணையில் அவர், அடிக்கடி கோபப்படும் விநோத பாதிப்பு உடையவர் என தெரியவந்தது. எனினும், காவல்நிலையத்தில் அவரை அழைத்து அதிகாரிகள் பேசிய போதும், அவர் பல்வேறு பதில் கேள்விகளை அச்சமின்றி எழுப்பினார்.அப்போது, ஏப்ரல் 6ம் தேதிக்கு முன்பாக என்ன சார் செய்து கொண்டிருந்தீர்கள் என எழுப்பிய கேள்விக்கு அங்கிருந்த எந்த காவல்துறை அதிகாரியாலும் பதில் சொல்ல முடியவில்லை.

Also Read  அதிமுகவுக்கு 110 போதும்… ஆனால் திமுகவுக்கு 134 தேவை… அமித்ஷா போடும் புதிய கணக்கு!

இதனிடையே, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம், தமிழகத்தில் கொரோனா பரவல் புதிய உச்சத்தை எட்டியதற்கு தேர்தல் பிரசாரம் காரணமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள ராதாகிருஷ்ணன், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒருவேளை தேர்தல் தான் காரணம் என்றால், தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தானே பரவல் அதிகரித்திருக்க வேண்டும் என விளக்கமளித்துள்ளார்.

Also Read  முழு ஊரடங்கு - வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை மெட்ரோவில் பணிபுரிய 13 திருநங்கையர் நியமனம்!

Tamil Mint

திமுக இன்று மாநிலம் முழுக்க போராட்டம், போலீஸ் குவிப்பு

Tamil Mint

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுன் 2.O? அச்சத்தில் மக்கள்…!

HariHara Suthan

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்… வெளியான பகீர் ரிப்போர்ட்!

Lekha Shree

பெண் மருத்துவர் திடீர் மரணம் – திருமணமான மூன்றே மாதத்தில் சோகம்

Devaraj

“கமலுக்காக விட்டுக்கொடுத்தேன்” – வேட்புமனு தாக்கல் செய்த பின் மன்சூர் அலிகான் பேட்டி!

Lekha Shree

அடுத்த மாதம் சென்னை வருகிறார் பிரதமர் மோடி

Tamil Mint

சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிகொலை…. அச்சக உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது

VIGNESH PERUMAL

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் சீட் கிடைக்குமா?

Lekha Shree

கட்சி கொடியுடன் பிக்பாஸில் கமல்

Tamil Mint

சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை

Tamil Mint

180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக போட்டி?

Devaraj