“ஜெய்பீம் உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்ட படமா?” – சூர்யாவுக்கு அன்புமணி கேள்வி..!


ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “திரைப்படத்தில் தேவையின்றியும் திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் வேதனையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்ற இளைஞரை காவல்துறை பொய் வழக்கில் கைது செய்து அவரை அடித்தே கொலை செய்து அதை மறைக்கிறது.

இந்த உண்மையை வெளிக்கொண்டுவர வழக்கறிஞர் சந்துரு மேற்கொள்ளும் சட்ட முயற்சிகள்தான் ஜெய் பீம் படத்தின் கதை.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படத்தில் வன்னியர் சமூகம் இழிவுபடுத்தப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் 9 கேள்விகளை எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “ஜெய்பீம் உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தானா?

Also Read  தமிழ் சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது

உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்றால் உண்மை நிகழ்வு நடந்த இடம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முதனை கிராமமா அல்லது விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கோணமலை கிராமமா?

உண்மை நிகழ்வில் முதன்மை கிராமத்தில் வாழ்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த ராஜாகண்ணு என்ற இளைஞரை கம்மாபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் கொடூரமாக அடித்து படுகொலை செய்த காவல்துறை சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது தங்களுக்குத் தெரியுமா? இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் ஜெய் பீம் திரைப்படத்தை உருவாக்கியிருக்க முடியாது.

ராஜாகண்ணுவை படுகொலை செய்த காவல் அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி என்பதை அறிந்திருந்தும் கூட கொலையான பழங்குடியினர் ராஜாகண்ணு என்றும் போராடும் வழக்கறிஞருக்கு சந்துரு என்றும் விசாரணை அதிகாரியான காவல்துறை ஐஜி பெருமாள்சாமி என்றும் உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரை சூட்டிய தாங்களும் இயக்குனரும் சார்பு ஆய்வாளர் பாத்திரத்திற்கு மட்டும் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டது ஏன்? நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைந்தது ஏன்?

காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட ராஜாகண்ணு மனைவி பார்வதி இப்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவர் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஊராட்சித் தலைவரும் ஊர் மக்களும் தான் தமக்கு துணையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவருமே வன்னியர்கள். அவ்வாறு இருக்கும்போது திரைப்படத்தில் ஊர்மக்களையும் ஊராட்சி தலைவரையும் கெட்டவர்களாகவும் ஜாதி வெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன்?

Also Read  தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று (ஜனவரி 3) தொடங்கியது

கொடூர காவல் அதிகாரியாக நடித்து இருப்பவர் வீட்டு தொலைபேசி காட்சியில் வன்னியர்களின் புனிதச் சின்னமான அக்னி கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி வைக்கப்பட்டு இருந்தது ஏன்?

படைப்பாளிகளில் இருவகை உண்டு. ஒரு தரப்பினர் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இரண்டாவது தரப்பினர் திரைப்படத்தில் ஏதேனும் சர்ச்சையை எழுப்பியது பேசுபொருளாக்கி அந்த விளம்பரத்தில் திரைப்படத்தை ஓட வைக்க முயல்பவர்கள். இவற்றில் உங்களை எந்த வகையில் சேர்ப்பது?

Also Read  சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தின் Exclusive Stills..! இணையத்தில் வைரல்..!

ஜெய்பீம் என்றால் அம்பேத்கருக்கு வெற்றி… அம்பேத்கரியத்திற்கு வெற்றி என்று பொருள். அம்பேத்கர் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தவேண்டும் என்று கற்பிக்கவில்லை. ஆனால், ஜெய்பீம் என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து நடித்துள்ள நீங்களும் உங்கள் குழுவினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தருவதை விட அவர்களை இழிவுபடுத்துவதில் தான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறீர்கள். இதுதான் ஜெய்பீம் என்பதற்கு நீங்கள் அறிந்து கொண்ட பொருளா?

ராஜாகண்ணு படுகொலை குறித்து 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தங்களுக்கு தெரியவந்துள்ளது. ஆனால் ராஜாகண்ணுவின் படுகொலைக்காக மற்ற கட்சிகளை இணைத்து முதலில் போராட்டம் நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 42 ஆண்டுகளாக சாதி, மதம் பார்க்காமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி உரிமைகளை வென்றெடுத்து தந்திருக்கிறார். அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார், இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியாதா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், “படைப்பாளிகளை விட ரசிகர்கள் தான் பெரியவர்கள். இன்ற படத்தில் உங்களின் வன்மத்தை காட்டினால் அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்கள் கோபத்தைக் காட்டக் கூடும்.

இவை எதுவுமே தேவையில்லை. சூர்யா உண்மையானவராக இருந்தால், அனைத்து வினாக்களுக்கும் விடை அளிப்பார் என நம்புகிறோம். அதுதான் மக்களின் கோபத்தை தணிக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் புகார்…! பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…!

sathya suganthi

நாளை வெளியாகும் விஜய்சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் புதிய டிரெய்லர்…!

Lekha Shree

மக்களையும் காக்கவில்லை.. நதிகளையும் காக்கவில்லை.. மோடியை கடுமையாக விமர்சித்த கமல்..

Ramya Tamil

தமிழ்நாடு – கேரளா எல்லையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்கும் போலீசார்.. தவிக்கும் மக்கள்…!

suma lekha

“இது வேற லெவல்!” – சிம்பு-கௌதம் மேனன் படத்தின் தலைப்பு மாற்றம்…!

Lekha Shree

தோல் வியாதியால் அவதிப்படும் பிரபல நடிகை…! அவரே வெளியிட்ட பதிவு..!

Lekha Shree

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்…!

Lekha Shree

ஓடிடியில் ‘ஜகமே தந்திரம்’: ஏமாற்றத்தை வெளிப்படுத்திய தனுஷ்… விளக்கமளித்த தயாரிப்பாளர்..!

Lekha Shree

மாநகராட்சிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை வரும் 10ம் தேதி முதல் திறக்கலாம்.

Tamil Mint

சசிகலா விடுதலை ஆகும் நாளன்று திறக்கப்படும் ஜெயலலிதா நினைவிடம்…!

Tamil Mint

“ஜெய் பீம் ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி!” – சீமான் புகழாரம்..!

Lekha Shree

‘சசிகலா 2.0!’ – ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா..! பாதுகாப்பு கேட்டு மனு..!

Lekha Shree