a

2 டோஸ்களுக்கு வெவ்வேறு கொரோனா தடுப்பூசி போடலாமா? – மத்திய அரசு விளக்கம்


நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்டு, பாரத் பயோ-டெக் தயாரிக்கும் கோவேக்சின் ஆகியவை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு தடுப்பூசிகளையும் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு டோஸ்களாக பயன்படுத்தப்படுகிறது. முதல் டோஸின்போது எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்துகிறமோ, 2-வது டோஸின்போதும் அதைத்தான் செலுத்தப்பட்டு வருகிறது.

Also Read  டுவிட்டருக்கு தடை : 'கூ' இந்திய செயலிக்கு கூடும் மவுசு…!

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் 20 பேருக்கு முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டிருந்த நிலையில், 2-வது டோஸ் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது.

இது மாநிலம் மட்டுமின்றி தேசிய அளவிலும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இது தடுப்பூசி குறித்த அச்சத்தை மக்களிடையே மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.

Also Read  நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு...! எந்த மாநிலத்தில் தெரியுமா?

இந்த பிரச்சினைக்கு நிதி ஆயோக் உறுப்பினரும், தேசிய கொரோனா தடுப்பு சிறப்புக்குழு தலைவருமான டாக்டர் வி.கே.பால் விளக்கம் அளித்துள்ளார்.

2 டோஸ்களுக்கும் வெவ்வேறு தடுப்பூசி போட்டுக்கொண்டால், பக்கவிளைவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் உண்மையில், வெவ்வேறு தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வது வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும் என்றும் கதை ஒன்று பரவுவதாக கூறிய வி.கே.பால், இது குறித்து உறுதியான முடிவு எடுப்பதற்கு, மேலும் ஆய்வு மற்றும் புரிதல் தேவைப்படும் என்றார்.

Also Read  வார் ரூமை பார்வையிட்ட ஸ்டாலின்… ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த உதயநிதி!

2-வது டோஸ் தடுப்பூசி போடும்போது முதல் டோஸ் போட்ட தடுப்பூசியையே போடுவது நலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுங்கள் – பிரியங்கா சோப்ராவுக்கு மியா கலீஃபா அட்வைஸ்!

Tamil Mint

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றில் குதித்த இளைஞரை சிறுவன் ஒருவன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினான்.

Tamil Mint

கொரோனா எதிரொலி – JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

Devaraj

பிரபல தாதா சோட்டா ராஜன் மறைவு குறித்த செய்தியை மறுத்த எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம்…!

Lekha Shree

இளைஞர்களை குறிவைக்கும் கொரோனா 2வது அலை…!

sathya suganthi

கொரோனா ஊரடங்கு எதிரொலி – களையிழந்த மணாலி…!

Lekha Shree

“கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க மாட்டு சாணம் பயன்படுத்தப்படுகிறது” – தேசிய பசு ஆணையம்

Shanmugapriya

நடப்பாண்டின் உச்சபட்ச கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 81,446 பேருக்கு தொற்று உறுதி…!

Devaraj

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

தக தக தங்க வேட்டை: யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?

Tamil Mint

அதிகரிக்கும் கொரோனா பரவலால் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…!

Lekha Shree

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது

Tamil Mint