a

“Work From Home” லேப்டாப்பில் சார்ஜ் போட்டுக்கொண்டே பணி செய்யலாமா?


கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தி உள்ளது.

இதனால், மடிக்கணினி மூலம் வீட்டில் இருந்தே பெரும்பாலானோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், திடீரென மின்வெட்டு ஏற்பட்டு லேப்டாப்பில் பவர் குறைந்துவிட்டால், பணி பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் பலரும் தொடர்ந்து லேப்டாப்புக்கு சார்ஜ் போட்டுக்கொண்டே வேலை செய்கின்றனர்.

இதனால் லேப்டாப்பின் செயல்திறன் பாதிக்கப்படுமா, பேட்டரி சீக்கிரம் சேதமடைந்து விடுமா என்ற பல்வேறு கேள்விகள் பயனர்களிடம் நிலவி வருகிறது.

Also Read  இன்று முதல் விலை உயரும் பொருட்களின் பட்டியல் இதோ...!

இந்த நிலையில், லேப்டாப்பை எப்போதும் ப்ளக் இன் செய்து வைத்து 100% சார்ஜில் வைப்பது பாதுகாப்பதும் சாதாரணமானது கூட என சில நிறுவனங்கள் கூறுகின்றன.

லேப்டாப்க்கள் தேவைக்கு அதிகமாக சார்ஜ் ஆகாமலும் அதிக சூடாகி விடாமலும் காக்கும் சென்ஸார்களை உள்ளடக்கியுள்ளன என லெனோவோ மற்றும் சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Also Read  பிரம்மாண்டமான எலக்ட்ரானிக் தலைகள்…! யார் இவர்கள் தெரியுமா…!

அதே சமயம் எல்லா நேரங்களிலும் லேப்டாப்பை சார்ஜ் செய்வதை தவிர்க்குமாறு ஹெச்பி உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பேட்டரிகள் 100% ஐ அடைந்தவுடன் சார்ஜ் ஆவதைத் தவிர்க்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன என்ற போதிலும், பேட்டரியின் மீது செலுத்தப்படும் அதிக அழுத்தம் காரணமாக ஏற்படும் விரைவான சிதைவைத் தடுப்பதில்லை என ஹெச்பி விளக்கம் அளித்துள்ளது.

இவற்றிற்கு நிபுணர்கள் கூறும் கருத்து என்னவென்றால், லேப்டாப்பை 100% வரை சார்ஜ் செய்வதற்குப் பதிலாக, ஒவ்வொரு முறையும் 80% வரை மட்டுமே சார்ஜ் செய்வது உசிதம் என்று பரிந்துரைக்கின்றனர்.

எப்போதுமே 100% இல் வைத்திருப்பது லேப்டாப்பின் ஆயுட்காலத்தைச் சிறிது குறைக்கும் என்றும் மிக உயர்ந்த நிலையான 100 சதவீதத்தில் மின்னழுத்தம் மிக அதிகமாக இருக்கும் என்பதால் 80% வரை சார்ஜ் இருந்தால் போதுமானது என்றும் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Also Read  ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் தேவை: மோடி வலியுறுத்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைகளை கவர்ந்த “மிட்டாய் தீம் பார்க்”…!

Devaraj

எவர் கிவன் கப்பலால் இவ்வளவு இழப்பா? அதிர்ச்சியூட்டும் தகவல்

Jaya Thilagan

ஐஸ்லாந்தில் நெருப்பு ஆறு – இணையத்தில் வைரலான வீடியோ…!

Devaraj

பூதாகரமான நிறவெறி சர்ச்சை – கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்த ஹாலிவுட் நடிகர்!

Lekha Shree

லேசான கொரோனா பாதிப்பு இருந்தா நல்லதுதான் – அமெரிக்க ஆய்வில் தகவல்

sathya suganthi

ஐநா சபையில் பிரதமர் மோடியின் உரை

Tamil Mint

“தாயின் அன்பே பெரிது” – புற்றுநோயால் பாதிப்படைந்த மகளுக்காக மொட்டை அடித்துக்கொண்ட தாய்! – வைரல் வீடியோ

Tamil Mint

பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பள்ளிக்கூடமாக மாறிய கடற்கரை! – சமூக இடைவெளியுடன் நடக்கும் வகுப்புகள்!

Lekha Shree

டொனால்ட் ட்ரம்பின் முந்தைய கொள்கைகளுக்கு செக் வைத்த புதிய ஜனாதிபதி பைடன்

Tamil Mint

ஆங்கிலோ இந்தியன் கொரோனா..! கலப்பின வைரசால் அச்சத்தில் வியட்நாம்…!

sathya suganthi

திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலன்; கட்டிப்பிடிக்க மணமகனிடம் அனுமதி கேட்ட மணமகள்!

Tamil Mint