அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் துவக்கம்


உலக புகழ்பெற்ற ஹார்வெர்ட் மருத்துவப் பள்ளியின் கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்வின் பெயரில் புதிதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையம் மனிதர்களின் விழிப்புணர்வு, அறிவாற்றல் மற்றும் கருணை ஆகிய 3 முக்கிய அம்சங்கள் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் எப்படி மேம்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்ய உள்ளது.

Also Read  திரையரங்கு 50% தான் இயங்கும்... ஆனால் வரி மட்டும் முழுமையாக கட்டவேண்டுமா?" மத்திய அரசை கிழித்தெடுத்த டி.ராஜேந்தர்! முதலமைச்சரிடம் கோரிக்கை!

பெத் இஸ்ரேல் மையமானது ஈஷா யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரும் தன்னார்வலர்களை கொண்டு தியானப் பயிற்சிகள் மூலம் உடலில் நடக்கும் மாற்றங்களை மருத்துவ ரீதியாக ஏற்கனவே ஆய்வு செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வான உலகிற்கான சத்குரு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த மையத்தின் இயக்குநர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், “இந்த பிரத்யேக மையத்தின் மூலம் மருத்துவம் மற்றும் சிந்தனை அறிவியலை ஒருங்கிணைத்து எங்களுடைய நோயாளிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிய உள்ளோம். சத்குருவின் பெயரில் இம்மையத்தை தொடங்கி இருப்பதை பெருமையாக கருதுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Also Read  அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை

மனித விழிப்புணர்வை மேம்படுத்தி விழிப்புணர்வான உலகை படைக்க விரும்பும் சத்குருவின் ‘Conscious Planet’ என்ற முன்னெடுப்புக்கு இம்மையம் உறுதுணையாக இருக்கும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகளை போட்டியிட நிர்பந்தமா? மு.க. ஸ்டாலின் விளக்கம்

Tamil Mint

தமிழ்நாடு: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree

அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ சீட்டு: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி

Tamil Mint

4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்.!

mani maran

நாளை கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

ஐந்து மாதங்களுக்குப் பின் சென்னையில் கோயில்கள், தமிழகம் முழுவதும் உடற்பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டன

Tamil Mint

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு… எவ்வளவு நாட்களுக்கு தெரியுமா?

Lekha Shree

வாக்காளர் பட்டியல் குறித்து சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

Tamil Mint

கொரோனா அறிகுறியா? மருத்துவமனைக்கு செல்லாமல் ஸ்க்ரீனிங் சென்டருக்கு வாருங்கள் – ராதாகிருஷ்ணன்

Devaraj

கோவை, காஞ்சி மாவட்ட கலெக்டர்களுக்கு வைரஸ்… மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுமா?

Tamil Mint

சென்னையில் 2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

Tamil Mint

தனியா வாங்க பேசுவோம், ஓட்டம் பிடித்த எஸ் ஏ சி

Tamil Mint