இஸ்ரேல்: முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு


அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் பல நாடுகள் மருந்துகளை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் பைசர் தடுப்பூசிக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. அதையடுத்து அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

Also Read  Jeff Bezos உடன் விண்வெளிக்கு செல்லும் 18 வயது இளைஞர்…!

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முதல் நபராக  தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து சுகாதாரத்துறை மந்திரி யூலி எடில்ஸ்டீன் தடுப்பூசி போட்டுக்கொண்டார். முதற்கட்டமாக 40 லட்சம் டோஸ்கள் மருந்து மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது.

“நாட்டில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது மிகச் சிறந்த நாள். மேலும், இந்த மாத இறுதிக்குள் பல லட்சம் டோஸ்கள் மருந்து வர உள்ளதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட முன்மாதிரியாக இருக்கவும், தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்கவும், சுகாதாரத்துறை மந்திரியுடன் இணைந்து நானும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டேன்” என்று இஸ்ரேல் பிரதமர் கூறினார்.

Also Read  பொது இடத்தில் முகக்கவசம் அணியாத இளைஞருக்கு 6 வாரங்கள் சிறை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ.25 கோடிக்கு ஏலம் போன ஓவியம்…!

Lekha Shree

குழந்தைகள் மூலமாகவே கொரோனா வேகமாக பரவுகிறது.. புதிய ஆய்வு..

Ramya Tamil

கொரானா பீதியால் இத்தாலி பார்களில் ஒயின் விண்டோ முறை அமல்!

Tamil Mint

“பூமிக்கு பக்கத்தில் இப்படி ஒரு கோளா?” – ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்… களத்தில் இறங்கும் நாசா..!

Lekha Shree

“உலகின் அழுக்கான மனிதர்” – 67 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் நபர்! – காரணம் என்ன தெரியுமா?

Tamil Mint

தலை நகருக்குள் புகுந்த தலிபான்கள்: அதிபரின் உயிர் கேள்விக்குறி.?

mani maran

10 மாதங்களில் 43 முறை கொரோனா தொற்றுக்கு உள்ளான முதியவர்!

Shanmugapriya

டயானாவின் 60வது பிறந்தநாள்…! முரண்பாடுகளை மறந்து இணைந்த வில்லியம்ஸ்-ஹாரி…!

sathya suganthi

வாட்ஸ் அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்

Tamil Mint

எல்லா வகை கொரோனாவையும் சமாளிக்கும் “சூப்பர் வாக்சின்” – எலி மீது பரிசோதனை…!

sathya suganthi

27 நொடிகளில் குழந்தை பெற்றெடுத்த பெண்! – ஆச்சரியமூட்டும் நிகழ்வு!

Shanmugapriya

நாசா திட்டம் திடீர் ரத்து

Tamil Mint