இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு!!


இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக் காலத்தை மத்திய அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கே.சிவன், தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானியாக 1982ஆம் ஆண்டு இணைந்தார். இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், பிஎஸ்எல்வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றினார். 

Also Read  அசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - கட்டிடங்கள் ஆட்டம் கண்ட காட்சிகள்...!

கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சிவனின் பங்களிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கே.சிவனின் பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதம் 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் அவரது பணிக்காலத்தை 2022, ஜனவரி 14-ஆம் தேதி வரை நீட்டித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Also Read  காலியாக உள்ள தொகுதிகளுக்கு விரைவில் வருகிறது இடைத்தேர்தல்

சந்திரயான்-1க்கு பின்னர் நிலவை ஆய்வு செய்ய, இந்தியாவின் இரண்டாவது விண்கலமான ‘சந்திரயான்-2’, 2019 ஜூலை 22 ஆம் தேதி நிலவை நோக்கி ஏவப்பட்டது. 

இந்த சந்திரயான்-2 திட்டம் நினைத்தபடி வெற்றிபெறவில்லை என்றாலும் அந்த திட்டத்தை முன்னின்று நடத்திய இஸ்ரோ தலைவர் சிவனை பிரதமர் மோடி தட்டிக்கொடுத்தது உலகளவில் பெரிதாகப் பேசப்பட்டது.

Also Read  இன்றைய கொரோனா அப்டேட் - ஒரே நாளில் 4,092 பேர் பலி...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Tamil Mint

சிறுநீரகத்தை விற்று குடும்ப வறுமையை போக்கிய அரசு ஊழியர்!

Tamil Mint

கொரோனா ஊரடங்கு எதிரொலி – களையிழந்த மணாலி…!

Lekha Shree

310 கி.மீ நீள நீர்வழித்தடத்தில் சூரியசக்தி படகில் பயணம் செய்த முதல்வர்!

Tamil Mint

ஏன் விவாகரத்து செய்தோம்? அமீர்கான் மற்றும் மனைவி கிரண் ராவ் இணைந்து வெளியிட்ட வீடியோ!

sathya suganthi

சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை – ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு!

suma lekha

அமேசானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு செல்போன் கிடைத்த ஆச்சரியம்!

Shanmugapriya

கொரோனாவால் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

கழிவறை நீரை குடிநீருக்கான இணைப்பில் சேர்த்து வைத்த ஊழியர்! – ரயில்வே அதிகாரி பணியிடை நீக்கம்!

Shanmugapriya

இண்டிகோ-வின் 15-வது ஆண்டுவிழா : டிக்கெட் விலை ரூ.915 மட்டுமே!

suma lekha