“புதிய ‘பிரைவசி’ பாலிசியை ஏற்க பயனர்களை கட்டாயப்படுத்த மாட்டோம்” – வாட்ஸ்அப் உறுதி!


வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது புதிய பிரைவசி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வாட்ஸ்அப் நிறுவனம், சமீபத்தில் அதன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான பிரைவசி கொள்கையில் மாற்றம் செய்வதாக அறிவித்தது.

Also Read  குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா - 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்…!

அதன்படி பயனாளர்களின் தகவல்கள், தாய் நிறுவனமான ஃபேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹாரிஷ் சால்வே, “புதிய பிரைவசி கொள்கையை நாங்களாகவே நிறுத்தி வைக்கிறோம். இந்த கொள்கையை ஏற்க வேண்டும் என பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம்.

இதனை ஏற்காதவர்களுக்கு வழங்கப்படும் சேவையை குறைக்க மாட்டோம். தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை புதிய கொள்கை குறித்த செய்தியை பயனாளர்களுக்கு காட்டுவோம். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம்” என தெரிவித்தார்.

Also Read  கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் குரூப் களை உருவாக்கியுள்ள இணையவாசிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய அரசின் கையிருப்பிலிருந்து வெங்காயம் சந்தைக்கு வழங்கப்பட்டது

Tamil Mint

பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் – தியேட்டர் கண்ணாடி உடைப்பு…வைரல் வீடியோ இதோ..!

HariHara Suthan

மதுபோதையில் 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!

Tamil Mint

இந்தியாவிலிருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்…!

Lekha Shree

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை தொடர்பு மொழியாக பயன்படுத்துங்கள்: அமித் ஷா

Tamil Mint

அமித்ஷா வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்

Tamil Mint

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்

sathya suganthi

தனது கணவர் கைது குறித்து ஷில்பா ஷெட்டியின் பரபரப்பு வாக்குமூலம்..!

suma lekha

கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்…!

Devaraj

பெங்களூரில் கலவரம்: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Tamil Mint

இப்படியும் ஒரு மனைவியா! அதிர்ந்து போன போலீஸ்… அந்த பெண் கணவனுக்காக செய்தது என்ன?

Lekha Shree

வெடித்து சிதறிய ஏடிஎம் எந்திரம்..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

Lekha Shree