லீக்கான சர்ச்சை புகைப்படம்…! அறிக்கை வெளியிட்ட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்..!


பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு மோசடி வழக்கில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகர் படுக்கையறையில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் படுக்கை அறையில் முத்தம் கொடுக்கும் செல்பி புகைப்படம் வெளியாகி இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அப்போது அதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காத ஜாக்குலின், தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்த நாடும் அதன் மக்களும் எப்போதும் எனக்கு மிகுந்த அன்பையும் மரியாதையையும் அளித்துள்ளனர். எனது ஊடக நண்பர்களும் அதில் அடங்குவர். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

Also Read  பிரணாப் முகர்ஜி உடல் இன்று தகனம், பிரதமர் நேரில் அஞ்சலி

நான் தற்போது கடினமான சூழ்நிலையில் இருக்கிறேன். ஆனால் எனது நண்பர்களும் ரசிகர்களும் என்னை கைவிட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

எனது தனியுரிமை மற்றும் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடும் இயல்புடைய படங்களை பரப்ப வேண்டாம் என்று எனது ஊடக நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு உரியவர்களுக்கு நீங்கள் இதை செய்ய மாட்டீர்கள். எனக்கும் இதை செய்ய மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

Also Read  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

சுகேஷ் சந்திரசேகர் எனும் நபர் அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்களை ஏமாற்றியும் பலருக்கு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் கைதாகி உள்ளார்.

இதுவரை ரூபாய் 200 கோடி மோசடி செய்திருப்பதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி பணம், தங்கம், விலை உயர்ந்த சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.

Also Read  'திருச்சிற்றம்பலம்' - லீக்கான தனுஷ்-நித்யா மேனன் டான்ஸ் வீடியோ…!

இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“மாஸ்டர்” விஜய்யாகவே மாறிய செல்வராகவன்… தாறுமாறு வைரலாகும் தனுஷ் அண்ணனின் லேட்டஸ்ட் வீடியோ…!

Tamil Mint

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ரூ.50,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் பரிசு…! எங்கு தெரியுமா?

Lekha Shree

மெல்போர்னில் இருந்து பறந்து வந்த விருது… சந்தோஷத்தில் சூர்யா-ஜோதிகா..!

suma lekha

இந்தியா: 2 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

Lekha Shree

வலிமை ரிலீஸ் தேதி இது தான் : தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு

suma lekha

இந்தியா : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.92 லட்சமாக உயர்வு!

Tamil Mint

சுப்பிரமணியன் சுவாமியின் அதிர்ச்சியைக் கிளப்பும் புது குண்டு

Tamil Mint

BMW கார் வாங்கி கெத்தாக போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!

HariHara Suthan

“பத்மஸ்ரீ விருதை திருப்பி தருகிறேன். ஆனால்…!” – கங்கனா ரனாவத் சவால்..!

Lekha Shree

1983 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்ற யஷ்பால் சர்மா காலமானார்…!

Lekha Shree

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு – உலக நாடுகளுக்கு கிரேட்டா தன்பெர்க் கோரிக்கை…!

Devaraj

‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை – நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

Lekha Shree