‘ஜகா’ படத்தில் கடவுள் அவமதிப்பு? தடை செய்ய வலுக்கும் கோரிக்கை..!


இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் ‘ஜகா’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜகா என்ற திரைப்படத்தை விஜய முருகன் தயாரித்து இயக்கியுள்ளார். பாஜக மாநில பொதுச்செயலர் கரு நாகராஜனின் மகன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Also Read  விக்ரமின் சாமுராய் பட கதாநாயகி முதல் முறையாக வெளியிட்ட அவரது குழந்தையின் வீடியோ இதோ..!

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை நமீதா வெளியிட்டுள்ளார். படத்தில் கொரோனா சமயத்தில் கோவில்கள் எல்லாம் மூடப்பட்டு கடவுள் சிலைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிய காட்சிகளையும் கதையாக வைத்து இருப்பதாகவும் கூறுகின்றனர்.

சிவபெருமான் முக கவசம் அணிந்து ஆக்சிஜன் சிலிண்டரிலிருந்து சுவாசிப்பது போன்ற படத்தை வெளியிட்டு உள்நோக்கத்தோடு இந்து மத நம்பிக்கையை அவமதிப்பது கண்டனத்துக்குரியது.

Also Read  கொரோனா பாதிப்பு: மீனவ குடும்பங்களுக்கு உதவும் 'குக் வித் கோமாளி' பிரபலம்!

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து மத கடவுள்களை மட்டும் என்றில்லை எந்த மத கடவுள்களை அவமதிக்கும் விஷயங்களை அனுமதிக்கக்கூடாது.

மத்திய அரசு சினிமா வரையறை திருத்தச் சட்டத்தை கொண்டு வர இருப்பதை இதுபோன்ற சினிமாக்காரர்கள் எதிர்ப்பதற்கான காரணம் இதுதான்.

Also Read  வெளியானது நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தின் முதல் பாடல்..!

இந்தத் திரைப்படக் குழுவினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். போஸ்டரை தடை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜனனி ஐயர் டு ஜனனி! – பெயரில் ஜாதியை நீக்கியதற்கு குவியும் பாராட்டு

Shanmugapriya

மகனுக்காக ரூ.3 கோடி கார் பரிசளித்தேனா? – சோனு சூட் விளக்கம்!

Shanmugapriya

‘பிக்பாஸ்’ வனிதா 4வது திருமணம்? – சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் செய்தி..!

Lekha Shree

அமேசான் பிரைமில் வெளியானது தனுஷின் ‘கர்ணன்’…!

Lekha Shree

இசைஞானியின் பிறந்தநாள்: அவர் குறித்த சில சுவாரசியத் தகவல்கள்..!

Lekha Shree

“எனது முதல் படத்தில் நீங்கள்… உங்களின் கடைசி படத்தில் நான்…” – நடிகர் சூர்யாவின் உருக்கமான கடிதம்!

Lekha Shree

பாலிவுட்டில் கால்பதிக்கும் அட்லீ? – எந்த டாப் ஹீரோ படம் தெரியுமா?

HariHara Suthan

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை தாப்ஸி…!

Lekha Shree

நடிகை த்ரிஷாவுக்கு விரைவில் டும் டும் டும்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

“அண்ணாத்த” எனக்கு கடைசி திரைபடமா? கண் கலங்கிய ரஜினி?

HariHara Suthan

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan