a

ஓடிடியில் ‘ஜகமே தந்திரம்’: ஏமாற்றத்தை வெளிப்படுத்திய தனுஷ்… விளக்கமளித்த தயாரிப்பாளர்..!


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன். ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்தும் நீண்ட நாள் கிடப்பில் கிடந்தத. தற்போது வருகிற 18ம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. அப்போது இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், “ஜகமே தந்திரம் தியேட்டரில் வெளியாக வேண்டிய படம். ஆனால், நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. எனினும் ரசிகர்கள் இப்படத்தை விரும்புவீர்கள் என நம்புகிறேன்” என தனுஷ் பதிவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் சசிகாந்த், “நான் தயாரித்த ஏலே, மண்டேலா படங்கள் அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் தான் வெளிவந்தது. இப்போது நான் தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Also Read  “கதைகளை கடன் வாங்க வேண்டிய தேவை எனக்கு இல்லை” - ஜீத்து ஜோசஃப்

இது நான் மனம் விரும்பி மகிழ்ந்து செய்யும் காரியம் இல்லை. சூழ்நிலை தான் இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்தது.

ஏலே, மண்டேலா படங்கள் ஏற்கனவே ஓடிடி தளத்திற்கு என ஒப்பந்தம் போடப்பட்ட படங்கள். திடீரென தியேட்டர்காரர்கள் ஒரு மாதத்திற்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று கூறியதால் நான் ஓடிடி தளத்துடன் போட்ட ஒப்பந்தத்தை மீற முடியவில்லை.

Also Read  பிக்பாஸ் வனிதா சொன்ன ‘குட் நியூஸ்’... செம்ம குஷியில் ரசிகர்கள்...!

அதன் காரணமாகத்தான் அந்த படங்கள் ஓடிடியில் வெளியானது. மற்றபடி தியேட்டர் உரிமையாளர்கள் மீது எனக்கு கோபமோ, வருத்தமோ, பகையோ எதுவுமில்லை.

ஜகமே தந்திரம் படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. நானும் தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தேன். காரணம் இந்த படம் தியேட்டர் அனுபவத்தை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டது.

Also Read  நடிகர் நிதிஷ் வீரா மறைவு - உருக்கமாக வீடியோ வெளியிட்ட இயக்குனர் வெற்றிமாறன்!

ஆனால், அதற்கான சூழ்நிலை இப்போது இல்லை. இனி எப்போது சூழ்நிலை சரியாகும் என்பது உறுதியாக தெரியவில்லை. எனவே ஓடிடி தளத்தில் வெளியிடுகிறேன்.

இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சகஜமானது. அது சரி செய்யப்பட்டுவிட்டது. எனது படங்களை தியேட்டரில் வெளியிடவே நான் முன்னுரிமை கொடுப்பேன்.

சூழலை சரியில்லாத போது ஒரு தயாரிப்பாளராக நான் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியது இருப்பதும் தவிர்க்க முடியாததாகும்” என்று விளக்கமளித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வென்றான் ‘அசுரன்’: 2வது முறையாக தேசிய விருது வென்ற தனுஷ்-வெற்றிமாறன் காம்போ…!

Lekha Shree

மாநாடு படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

அருண் விஜய் – இயக்குனர் ஹரி மாஸ் கூட்டணி! AV33 படத்தின் சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு இந்த பிக்பாஸ் பிரபலம் நண்பரா? வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree

ரஜினி படத்தில் கமல்: லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்

Tamil Mint

என் கஷ்டம் உனக்கு புரியுதா?… காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட வைரல் வீடியோ…!

Tamil Mint

வைரலாகும் அஜித்-சிவகார்த்திகேயனின் அரிய புகைப்படம்…!

Lekha Shree

அமலாபாலின் அதிரடி போஸ்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Tamil Mint

கொரோனா காலத்தில் கும்பலாக பிறந்தநாள் கொண்டாடிய பிந்து மாதவி? வைரலாகும் புகைப்படங்கள்!

Lekha Shree

கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

HariHara Suthan

சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் மரணம்…!

Lekha Shree

கவர்ச்சியின் உச்சத்தில் நடிகை அதுல்யா ரவி! வெளியானது ‘முருங்கைகாய் சிப்ஸ்’ ட்ரெய்லர்!

Lekha Shree