மீண்டும் தலைதூக்கும் ‘ஜெய் பீம்’ பட விவகாரம்…! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #SuriyaStopVanniyarHate …!


தமிழ்நாட்டில் ‘ஜெய் பீம்’ படம் குறித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை. நடிகர் சூர்யா தங்களை மனதளவில் காயப்படுத்தியதற்கு மன்னிப்பு கோரியே ஆக வேண்டும் என வன்னியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Also Read  மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி!

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து நடிகர் சூர்யாவிற்கு பல திரையுலக பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் ஆதரவாக குரல் கொடுத்தனர்.

அதேபோல் சர்ச்சைக்கு காரணமாக இருந்த காலண்டர் மாற்றப்பட்டு விட்டாலும் இன்னும் சர்ச்சை அலைகள் ஓய்ந்ததாக தெரியவில்லை.

Also Read  ஊரக உள்ளாட்சி தேர்தல் - வேலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி இடப்பங்கீடு நிறைவு..!

நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகிய மூவர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே இயக்குனர் ஞானவேல், “இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது” என கூறி அறிக்கை வெளியிட்டும் கூட இந்த சர்ச்சை முடிவுக்கு வரவில்லை.

Also Read  மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் 'தளபதி' விஜய்?

சற்று ஓய்ந்திருந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ட்விட்டரில் #SuriyaStopVanniyarHate, #StopVanniyarHateNow என்ற 2 ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பெண்களுக்கு அரசியலில் சவால்கள் அதிகம்!” – கனிமொழி எம்.பி. அதிரடி பதில்..!

Lekha Shree

கானாதான் சென்னையின் நாட்டுப்புற இசை- சந்தோஷ் நாராயணன்

Tamil Mint

பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு விபத்து…!

Lekha Shree

புயல் சேதங்களுக்கு மத்தியில் நடனம் ஆடிய நடிகை – கொந்தளித்த நெட்டிசன்கள்!

Lekha Shree

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த விசிக எம்.எல்.ஏக்கள்…! காரணம் இதுதான்…!

Lekha Shree

சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ Second look…!

Lekha Shree

டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும்: கமல்ஹாசன்

Tamil Mint

‘ஏ ராசா’ – மாமனிதன் படத்தின் 2வது பாடல் வெளியானது..!

Lekha Shree

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint

பிரதமரின் காலில் விழ முயன்ற அதிமுக எம்பி – மோடி கொடுத்த சூப்பர் அட்வைஸ்! இது தேவையா?

Lekha Shree

ராமர் கோயில் நிதி சேகரிப்பா? அல்லது தேர்தல் பிரச்சாரமா? பாஜகவின் புதிய யுக்தி!

Tamil Mint

ஹைதராபாதில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடக்கம்

Tamil Mint