சூர்யாவிடம் நஷ்டஈடு கேட்ட விவகாரம்..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #பணம்பறிக்கும்_பாமக ..!


உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய் பீம்.

இது அமேசான் ஓடிடி தளத்தில் நவம்பர் 2ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்தது.

சர்ச்சைக்கு காரணமான காலண்டர் காட்சியில் சிறு திருத்தும் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், இந்த சர்ச்சை முற்றிலும் முடியவில்லை.

Also Read  முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..

ராஜாகண்ணுவை கடுமையாக தாக்கும் காவல்துறை ஆய்வாளரின் பெயர் ஏன் மாற்றப்பட்டது? என கேள்வியெழுந்தது. இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதமும் பதிலுக்கு சூர்யா எழுதிய கடிதமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே மயிலாடுதுறையில் நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்ட போது திரை அரங்கிற்கு வந்த பாமகவினர் திரைப்படக் காட்சியை நிறுத்த சொன்னதால் அத்திரைப்படத்தின் காட்சி நிறுத்தப்பட்டது.

நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் முழக்கமிட்டு, சூர்யாவின் போஸ்டரை கிழித்தனர். நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில் #WeStandwithSuriya என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது.

Also Read  #7YearsOfAnjaanSupremacy: ட்விட்டரை தெறிக்கவிடும் சூர்யா ரசிகர்கள்.!

அதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல், அமேசான் நிறுவனம் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ஒருவாரத்திற்குள் நடிகர் சூர்யா ரூ.5 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

Also Read  பிக்பாஸ் சீசன் 5: ஒரு நாள் ஷூட்டுக்கு கமல்ஹாசன் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மேலும், 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் மனுதாரர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து ட்விட்டரில் சூர்யாவின் ரசிகர்கள் #பணம்பறிக்கும்_பாமக என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து சூர்யாவிற்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: +2 தேர்வு நடத்த வலுக்கும் ஆதரவுகள்..!

Lekha Shree

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயாவுக்கு மாற்றம்…!

Lekha Shree

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் விவரம் இதோ…!

Devaraj

அசுரன் பட நடிகைக்கு கொரோனா…!

sathya suganthi

தமிழகத்தில் இன்று 1,449 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

suma lekha

நடிகர் விவேக் செய்த கடைசி போன் கால் – யாருக்கு தெரியுமா?

Lekha Shree

‘பிக்பாஸ்’ சீசன் 5ல் பங்கேற்கும் ‘மாஸ்டர்’ மகேந்திரன்?

Lekha Shree

“கே.வி. ஆனந்துடன் படம் பண்ண நினைத்தேன்… மிஸ் பண்ணிவிட்டேன்!” – நடிகர் ரஜினியின் வைரல் வீடியோ!

Lekha Shree

புதிய கார் வாங்கிய KPY சரத்… வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்…!

suma lekha

தொடரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் பூசல்? – போஸ்டரால் பரபரப்பு..!

Lekha Shree

வெளியானது அருண்விஜய்யின் ‘பார்டர்’ பட டிரெய்லர்…!

Lekha Shree

“இசுலாமியரென்பதால் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா?” – சீமான் கண்டனம்..!

Lekha Shree