‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை – நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!


‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

ஆனால், படத்தில் வன்னியர்கள் குறித்து வேண்டுமென்றே தவறான குறியீடு வைத்ததாக பாமக மற்றும் வன்னியர் சங்கம் குற்றம்சாட்டி வருகின்றன.

சர்ச்சைக்குரிய அந்த குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்ட பின்னரும் சூர்யா நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

Also Read  வெளியானது மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர்...!

இதனிடையே ‘ஜெய்பீம்’ படம் குறித்த சர்ச்சையால் மயிலாடுதுறையில் ஓடிக்கொண்டிருந்த சூர்யா நடித்த ‘வேல்’ திரைப்படத்தை பாமகவினர் நிறுத்தினர்.

அத்துடன் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Also Read  டிடிவி தினகரன் மகள் திருமணம் - திருமண ஜோடிகளை வாழ்த்திய சசிகலா…! வைரல் புகைப்படம் இதோ..!

இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள் 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் பல ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இப்படத்திற்கும் சூர்யாவுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Also Read  மதுக்கடைகளை உடனே மூடுங்கள்: ராமதாஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கல்விக்காக உதவி கோரிய கல்லூரி மாணவிக்கு ரூ 1லட்சம் வழங்கிய காஜல் அகர்வால்! குவியும் வாழ்த்து..

Jaya Thilagan

டிசம்பர் 2-வது வாரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…!

Lekha Shree

‘நெற்றிக்கண்’ படத்தின் முக்கிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு காலமானார்!

Jaya Thilagan

செப்டம்பர் 7 ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பஸ், ரயில் சேவை :

Tamil Mint

ஆம்புலன்ஸ் ஆக மாறிய கார்கள்; ககன்தீப் சிங் பேடி அதிரடி திட்டம்!

Lekha Shree

தூத்துக்குடியில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!

suma lekha

“திரைப்பட கருத்துக்களை திரையரங்குகளிலேயே விட்டுவிட வேண்டும்!” – நடிகர் ராதாரவி

Lekha Shree

மெட்ரோவில் முகக்கவசம் இல்லாமல் சென்றால் விதிக்கப்படும் ரூ.200 அபராதம் ரத்து..!

suma lekha

“அதிமுக என்ற எஃகு கோட்டையை கரையான்கள் அரிக்க முடியாது!” – ஜெயக்குமார் திட்டவட்டம்..!

Lekha Shree

பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்! – வெளியானது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மேக்கிங் வீடியோ..!

Lekha Shree

நடிகர் ஆர்யா வழக்கு: சென்னை காவல் ஆணையர் விளக்கம்..!

suma lekha