ஜெய்ப்பூர்: வெளியான நீட் தேர்வு வினாத்தாள்… மோசடியில் ஈடுபட்ட மாணவி உட்பட 8 பேர் கைது…!


செப்டம்பர் 12ஆம் தேதி நீட்தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்ப்பூரில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு கண்காணிப்பாளர் வினாத்தாளை வாட்ஸ்அப் மூலம் வெளி ஆட்களுக்கு அனுப்பி விடைபெற்று ஒரு மாணவிக்கு உதவியுள்ளார்.

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து தற்போது அந்த மாணவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் பொறியியல் கல்லூரி நீட் தேர்வு மையமாக செயல்பட்டு வருகிறது. தேர்வு மைய கண்காணிப்பாளர்களில் ஒருவரான ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர் தினேஷ்வரி குமாரி என்ற மாணவிக்கு தங்களது மொபைல் போனில் வினாத்தாளை புகைப்படம் எடுத்து சித்ரகூட் பகுதியில் உள்ள இருவருக்கு அனுப்பியுள்ளனர்.

அவர்கள் அதனை சிகார் பகுதியில் உள்ள சிலருக்கு அனுப்பி விடைகளை பெற்று மீண்டும் ராம் சிங்கிற்கு அனுப்பியுள்ளனர்.

Also Read  நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி..! தமிழகத்தில் மீண்டும் ஒரு சோக நிகழ்வு..!

அதனைக் கொண்டு அந்த மாணவி சரியான விடைகளை எழுத வழங்கியுள்ளனர். இத்தகவல் அறிந்த ஜெய்ப்பூர் போலீசார் மோசடியில் சம்பந்தப்பட்ட மாணவி உட்பட 8 பேரை கைது செய்தனர்.

இதில் நீட் கோச்சிங் சென்டர் ஒன்றும் இடைத்தரகராக செயல்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இந்த பணியை முடித்து தர தேர்வு கண்காணிப்பாளர் ரூபாய் 30 லட்சம் பேரம் பேசியுள்ளனர்.

Also Read  கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மீண்டும் தொடங்கும் "நீட்" பயிற்சி…!

அதில் முதல் தவணையாக ரூபாய் 10 லட்சத்துடன் மாணவியின் மாமா தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடும் அதிருப்தியை தந்துள்ளது. மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்து விட்டதால் மறுதேர்வு நடக்க வாய்ப்பில்லை என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்தடுத்து டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் – ஜம்முவில் பதற்றம்

sathya suganthi

அயோத்தி: பாபர் மசூதியின் மாதிரி வரைபடம் வெளியீடு

Tamil Mint

அமோக வரவேற்பை பெற்றுவரும் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்!

Tamil Mint

வீரசிவாஜி சிலையை காண கடலுக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை!

Tamil Mint

“இந்தப் பொறுப்பு இவருக்கு மிகவும் பொருத்தமானது” -சைலேந்திர பாபுவுக்கு சீமான் வாழ்த்து!

Shanmugapriya

கொரோனா தடுப்பு ஊசி வேண்டாம்- அச்சத்தில் தெறித்து ஓடும் கிராம மக்கள்

Shanmugapriya

நடிகை ஜூஹி சாவ்லா பரபரப்பு பேட்டி

Tamil Mint

கொரோனாவே இல்லாத இந்திய கிராமம்…! வெளியான ஆச்சரிய தகவல்..!

Lekha Shree

கர்நாடகாவில் கொரோனாவுக்கு 3.27 லட்சம் பேர் பலியா? பகீர் குற்றம் சாட்டும் காங்கிரஸ்!

Lekha Shree

மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்?

Tamil Mint

3வது இடத்தில் இந்தியா ..

Tamil Mint

தோனியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம்! காரணம் இதுதானா?

Lekha Shree