ராஜ்யசபா எம்.பி.யாக நான் தேர்வு செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்


வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ராஜ்யசபா எம்.பி.யாக நான் தேர்வு செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை” என  உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க., வைச் சேர்ந்த அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர் கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றனர்.  அதையடுத்து ராஜ்யசபா எம்.பி. பதவியை அவர்கள் ராஜினாமா செய்தனர். 

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள்

அதனால் குஜராதில் அந்த இரண்டு இடங்களுக்கு தனித் தனியாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த இரண்டு இடங்களிலும் பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 

அந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் போட்டியிட்டார். இதைத்தொடர்ந்து அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரசை சேர்ந்த கவுரவ் பாண்டயா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

Also Read  குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..!

அந்த வழக்கில் அமைச்சர் ஜெய்சங்கர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அம்மனுவில், “ஒரு மாநிலத்தில் இரண்டு ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனத்திலோ மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலோ குறிப்பிடப்படவில்லை. அதனால் என்னுடைய வெற்றி செல்லும். ஆனால் சட்டவிதிகளை தவறாகப் பயன்படுத்தி தொடர்ந்து இதுபோன்று வழக்குகளை மனுதாரர் தாக்கல் செய்து வருகிறார்; அதை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. 

Also Read  புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வதற்கு புதிய விதிகள்

இந்த வழக்கு வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு வரவுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ. 1000 கேஷ்பேக் ஆஃபர்.. எஸ்.பி.ஐ அசத்தல் அறிவிப்பு.. விவரம் உள்ளே

Ramya Tamil

வங்கக் கடலில் உருவாகும் ‘குலாப்’ புயல்…! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Lekha Shree

மத வேறுபாட்டை தூண்டும் போலி முகநூல் செய்தி… வைரலாகும் உண்மை புகைப்படம்!

Lekha Shree

ராஜஸ்தானில் கலகலக்கும் காங்கிரஸ் அரசு, பின்னணியில் பாஜக?

Tamil Mint

“ஆண் குழந்தை தான் வேண்டும்” – மனைவிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்த கொடூரன்..!

mani maran

ரூ.60 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது! போலீஸில் சிக்கியது எப்படி?

Tamil Mint

’ஆப்கான் விவகாரமும் இந்தியாவின் நிலைப்பாடும்’… அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு..!

suma lekha

ரூ.50,000-க்கு மேல் டி.டி.எஸ் பிடித்தமா? வருமான வரிக்கணக்கு தாக்கல் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை!

Tamil Mint

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாததற்கு இதுதான் காரணம்.. பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர்..

Ramya Tamil

வினோத திருமணம்: சேலை கட்டிய மணமகன்… பட்டு வேட்டியில் மணமகள்…!

Lekha Shree

மகளிர் தினத்தன்று பெண்கள் செல்போன் வாங்கினால் 10% தள்ளுபடி! – ஆந்திர அரசு அதிரடி

Shanmugapriya

சீனாவிடம் நிதி பெற்றாரா சோனியா? பகீர் புகார்

Tamil Mint