தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..!


பொங்கல் திருநாளை முன்னிட்டு புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் 700 காளைகள்,300 வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதையடுத்து,மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ,நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்துள்ளார்கள்.

Also Read  ஒரே நேரத்தில் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் - வானிலை ஆய்வு மையம்

இதனையடுத்து,வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து வருகின்றன.அதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து வெற்றி கண்டு வருகின்றனர்.மேலும்,சிறந்த வெற்றியாளர்களுக்கு கார்,பைக், தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் காத்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து,அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 4 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில்,மாடுபிடி வீரர்கள்,ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா நெகடிவ் சான்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் 100% இருக்கைகளோடு தியேட்டர்கள் திறப்பதற்கு எதிர்ப்பு குறித்து வருவாய்த்துறையிடம் ஆலோசனை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மாறாக,வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொலைக்காட்சி,இணையம் வழியாக பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளர்கள். இதற்கிடையில்,அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு சிறப்புப் பரிசாக கார் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை” – கமல்ஹாசன் காட்டம்!

Lekha Shree

தேர்தல் களத்தில் கலக்கும் விஜய் வசந்த் – ட்ரெண்ட்டாகும் #AskVijayVasanth ஹாஷ்டாக்..!

HariHara Suthan

டிடிவி தினகரன் மகள் திருமணம் – திருமண ஜோடிகளை வாழ்த்திய சசிகலா…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

பணமோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைப்பு..!

Lekha Shree

அவதூறு பேச்சு: நேரில் ஆஜராவாரா ஆ.ராசா?

Lekha Shree

அறிஞர் அண்ணாவின் நினைவு தினம்: ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

Tamil Mint

தமிழகத்தில் ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்… 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருத்து!

Tamil Mint

இந்த சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு

Tamil Mint

கொடைக்கானல்: பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி…! வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி..!

Lekha Shree

“தமிழ் நூல்களை ‘திராவிட களஞ்சியம்’ என அடையாளப்படுத்த முயல்வது திராவிட திருட்டுத்தனத்தின் உச்சம்” – சீமான் ஆவேசம்..!

Lekha Shree

மருத்துவக் கல்வி: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Tamil Mint

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint