2021-ல் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி!


தமிழகத்தில் 2021-ல் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர்.  நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு,  2017 முதல் ஜல்லிகட்டு நடத்தப்பட்டு வருகிறது.

Also Read  கணவனை திருத்த கண்டித்த மனைவி..... மதுபோதையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை...

ஜல்லிகட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டும் அல்லாமல், பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும்.  ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, எதிர்வரும் 2021-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் அரசு தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

Also Read  பாலியல் வழக்கு - சிவசங்கர் பாபாவின் பள்ளியில் இருந்து வெளியேறிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்!

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில்  மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

எருது விடும் நிகழ்ச்சியில்  150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு  நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக  பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கோவிட்-19 தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.

Also Read  அமைச்சர் துரைக்கண்ணு மரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

மேலும், நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஜகவினர் தாக்குதல் நடத்திய கடையில் கமல்…! காலணி வாங்கி ஆதரவு…!

Devaraj

அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி.

Tamil Mint

சீமான் மீது பாய்ந்த புது வழக்கு, கைது செய்யப்படுவாரா?

Tamil Mint

ஒரு 100 ரூபாய் வைக்க மாட்டியா? – துரைமுருகனை கலாய்த்துச் சென்ற திருடர்கள்

Devaraj

கொரோனாவுக்கு தமிழக அரசு இது வரை செய்துள்ள செலவு எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

நாங்கள் மிட்டாய் கொடுக்கிறோம் என்றால் நீங்கள் என்ன அல்வா கொடுக்கிறீர்களா? – ஸ்டாலின் காட்டம்!

Lekha Shree

நீட் மரணங்கள்… உறுதியற்ற நிலைப்பாடுகளுமே காரணம் : இயக்குனர் ரஞ்சித் ட்வீட்

suma lekha

போகிற போக்கில் சசிகலாவுக்கும் குட்டு வைத்த கமல்…!

Devaraj

நாட்டிலேயே அதிக தார் சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் – நிதியமைச்சர் பெருமிதம்

mani maran

முழு ஊரடங்கு – வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்…!

Devaraj

“பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வாய்ப்பே இல்லை!” – அமைச்சர் பாண்டியராஜன்

Shanmugapriya

சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டாரா? – எச்.ராஜா பேச்சால் பரபரப்பு!

Lekha Shree