“பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்களை சிறையில் அடையுங்கள்!” – ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர்!


ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, “இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதைக் கொண்டாடியவர்களை சிறையில் அடைக்க வேண்டும்” என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் குரூப்-2 பிரிவில் உள்ள இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின.

Also Read  அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்: அண்ணாமலை அதிரடி

அந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது பாகிஸ்தான் அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்தது.

Also Read  பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம் - பாஜக

இதனால், 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான். உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து 5 முறையும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 7 முறையும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியைக் கண்டுள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியால் பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் சில மாணவர்கள் பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியதாக செய்திகள் வெளியான நிலையில், “இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதைக் கொண்டாடியவர்களை சிறையில் அடைக்க வேண்டும்” என ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  8 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட வரன் தான் வேண்டும்” – திருமண டிமாண்ட் பட்டியலில் சேர்ந்தது கொரோனா தடுப்பூசி!

sathya suganthi

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்!

Shanmugapriya

இடைக்கால பட்ஜெட் – முக்கிய அம்சங்கள் என்னென்ன? முழுவிபரம்

Devaraj

“அடுத்த இலக்கு ஷாருக்கான் தான்!” – மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்

Lekha Shree

கொரோனா பாதிப்பால் மரத்தில் கட்டிலை கட்டி தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நபர்!

Shanmugapriya

EVM இயந்திரமா? டிரில்லிங் மிஷினா? பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டார்! வைரலாகும் மீம்ஸ்!

Lekha Shree

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர்…!

Lekha Shree

இந்தியா: தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.17 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

90 நாட்களுக்கு தொடர்ந்து பறக்கும் டிரோன்… இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு தயாரிப்பு!

Tamil Mint

கொரோனாவால் மரணத்தின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்த தாய்… உருக்கமாக பாடல் பாடிய மகன்..!

Lekha Shree

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா…!

Jaya Thilagan

டெல்டா மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil Mint