“அதிமுக என்ற எஃகு கோட்டையை கரையான்கள் அரிக்க முடியாது!” – ஜெயக்குமார் திட்டவட்டம்..!


சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் கருத்துக்கு ஆதரவாக செல்லூர் ராஜு பேசியுள்ள நிலையில் ஜெயக்குமார், “அதிமுக என்ற எஃகு கோட்டையை கரையான்கள் அரிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது தொடர்பாக கழகத்தின் தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்திருந்தார்.

சசிகலா விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மாறுபட்ட கருத்தால் காட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த முரண்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் செல்வராஜ் கூறுகையில், “சசிகலா விவகாரத்தில் அதிமுக காட்சிக்குள் சர்ச்சையை கிடையாது. பழுத்த மரம்தான் கல்லடிபடும்.

Also Read  தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: சீமானின் நாம் தமிழர் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் 3வது இடம்…!

சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கருத்து சொன்ன பிறகு இணை ஒருங்கிணைப்பாளர் கருத்து சொல்லவில்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தை தான் ஒருங்கிணைப்பாளர் சொன்னார்.

அதில் என்ன தவறு இருக்கிறது? ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் சொன்னதில் தவறு எதுவும் இல்லை.

Also Read  பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிப்பு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்று தான் ஓபிஎஸ் சொன்னார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட காரணத்தால் நிர்வாகிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அந்த கருத்துக்களை இப்போது சர்ச்சையாக மாற்ற விரும்பவில்லை” என கூறினார்.

இப்படி சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் கருத்துக்கு ஆதரவாக செல்லூர் ராஜு பேசியுள்ள நிலையில் ஜெயக்குமார், “அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த காலத்திலும் இடமில்லை. சசிகலாவுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ இன்றைக்கும், என்றைக்கும் இடமில்லை.

Also Read  தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

சசிகலாவை ஆதரிப்பவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என்பது அதிமுகவின் நிலைபாடு. அதிமுக என்ற எஃகு கோட்டையை கரையான்களால் அரிக்க முடியாது” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எம்.பி. விஜய் வசந்தின் சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கம்..! நடந்தது என்ன?

Lekha Shree

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்..!

suma lekha

டி.சி.எஸ் ஊழியருக்கு எதிரான மீடூ வழக்கை விரைவாக கண்காணிக்க ஆர்வலர்கள் முதல்வருக்கு கோரிக்கை

Tamil Mint

“நான் பைத்தியக்காரனுக்கு பதில் சொல்லமாட்டேன்!” – ஹெச்.ராஜாவின் சர்ச்சை கருத்துக்கு சீமான் பதிலடி..!

Lekha Shree

“வீடு வேண்டும்” – முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த ‘ரவுடி பேபி’ சூர்யா..!

Lekha Shree

‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ – புதிய கட்சி துவங்கிய கேப்டன் அமரிந்தர் சிங்..!

Lekha Shree

“காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை” – ஜோதிமணி எம்.பி

Lekha Shree

திரிணாமுல் காங்கிரசில் இணைந்த டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ்..!

suma lekha

உறவினர்களுக்கு இ-டெண்டர் அளிக்கப்படும் மாயம் என்ன? கமல் கேள்வி

Devaraj

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்…! எவற்றிற்கு அனுமதி…! எவற்றிற்கு தடை…!

Devaraj

தியேட்டர்கள் இந்த தினங்கள் இயங்க தடை வழங்கவேண்டும் என வழக்கு.!

suma lekha

தமிழகத்தில் வீடு தேடி வரும் ரேஷன் கடைகள்

Tamil Mint