“வேதா இல்லத்தை தீபா, தீபக்கிடம் 3 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்


போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை தீபா, தீபக்கிடம் 3 வாரங்களுக்குள் சென்னை ஆட்சியர் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் எனும் வீட்டில்தான் வசித்து வந்தார். அவர் மறைவிற்கு பின், இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Also Read  தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கும் அண்ணாமலை - மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு..!

அதையடுத்து அந்த இடத்தை தமிழக அரசு அரசுடைமை ஆக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இதை எதிர்த்து போயஸ் கார்டனில் குடியிருப்போர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

நீண்ட மாதங்களாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. “போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு?

Also Read  "தமிழகத்தில் இன்று மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது" - தமிழக அரசு

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை தீபா, தீபக்கிடம் 3 வாரங்களுக்குள் சென்னை ஆட்சியர் ஒப்படைக்க வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மருத்துவ படிப்புகளுக்கு நேரடி கலந்தாய்வு வேண்டாம்: ஸ்டாலின்

Tamil Mint

சென்னை: பிரபல நகைக்கடையில் தீ விபத்து…!

Lekha Shree

“என் தம்பி முதலமைச்சராக பதவியேற்பதில் பெருமை” – மு.க. அழகிரி

Lekha Shree

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்கள் விற்பனைக்கு அமோக வரவேற்பு

Tamil Mint

சென்னையின் புது காவல் ஆணையராக பொறுப்பேற்ற மகேஷ்குமார் அகர்வால்: முதல் வாக்குறுதி என்ன தெரியுமா?

Tamil Mint

தமிழகத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

Tamil Mint

எடப்பாடி, ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம்?

Tamil Mint

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்! ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி காரசார வாதம்!?

Tamil Mint

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா: சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு!

Lekha Shree

தமிழகம்: ஊரடங்கு நீட்டிப்பு… தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.! இல்லத்தரசிகள் தலையில் இடியை போட்ட அறிவிப்பு!

Lekha Shree

முகக்கவசம் அணியாவிடில் அபராதம் – தமிழக அரசு

Devaraj