விண்வெளியில் மிதந்த ஜெஃப் பெசோஸ்… ட்ரெண்டாகும் வீடியோ இதோ..!


அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் விண்வெளியில் மிதக்கும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

உலகப் பணக்காரர்களில் ஒருவரான Jeff Bezos குறைந்த கட்டணத்தில் விண்வெளி சுற்றுலாவை சாத்தியப்படுத்தும் முயற்சியாக Blue Origin நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கடந்த 11ஆம் தேதி பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன் 90 கிலோமீட்டர் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

விண்வெளி சுற்றுலா நிறுவனமான விர்ஜின் கேலடிக்டின் உருவாக்கிய யூனிட்டி22 என்ற விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீஷாபாண்ட்லா (34) உள்ளிட்ட ஆறு பேர் பயணம் செய்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினர்.

Also Read  டிவியில் நொறுக்கு தீனி விளம்பரங்களுக்கு தடை - எங்கு, எதற்கான தெரியுமா?

அதையடுத்து Jeff Bezos தனது நிறுவனம் வடிவமைத்த New Shepherd விண்கலத்தில் நேற்று 100 கிலோ மீட்டர் தூரம் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார்.

தானியங்கி முறையில் இயங்கும் 60 அடி நீள விண்கலத்தில் Jeff Bezos, அவரது சகோதரர் மார்க் பெஸாஸ், 82 வயது முன்னாள் பெண் விமானி வாலி பங்க் மற்றும் ஆலிவர் டேமென் என்ற 18 வயது இளைஞர் ஆகியோர் பயணித்தனர்.

Also Read  அப்போது கொரோனா ஹாட்ஸ்பாட்! - தற்போது 24 மணி நேரத்தில் 21 பேருக்கு மட்டுமே பாதிப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு ஏவப்பட்டது New Shepherd விண்கலம்.

3,600 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் விண்வெளியில் சரியாக 11 நிமிடங்கள் மிதந்தது.

அப்போது நான்கு பேருமே ஹீரோ கிராவிட்டியை அனுபவித்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் Jeff Bezos.

இந்த வீடியோவில் ஜெப் பெசோஸ் உருளையான ஒரு சிறிய பொருளை தூக்கி எறிகிறார். அதனை கேட்ச் பண்ணி ஆலிவ் மீண்டும் அவரை நோக்கி வீசுகிறார்.

Also Read  கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

இப்படியாக நான்கு பேரும் தங்களது இருக்கையை விட்டு அங்கும் இங்குமாக மிதந்தபடி ஜீரோ கிராவிட்டியை உற்சாகமாக அனுபவிக்கின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

3 மாதங்கள் கழித்து தனது கைக்குழந்தையை கண்ட தாய் !!!

Tamil Mint

ஏவுகணையை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

Tamil Mint

மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு மோசடி வழக்கில் 7 ஆண்டு சிறை…!

sathya suganthi

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இருதய நோய்? – வைரலாகும் உடல் மெலிந்த புகைப்படம்

sathya suganthi

பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

மிகப் பெரிய மாம்பழம் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த விவசாயிகள்!

Shanmugapriya

கொரோனா சிகிச்சை மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது WHO!

Shanmugapriya

வயதான எஜமானருக்காக தினமும் மருத்துவமனைக்கு வந்து காத்திருக்கும் நாய்!

Tamil Mint

தைவானில் இரண்டு போர் விமானங்கள் விபத்து….. விமானி மாயம்…..

VIGNESH PERUMAL

ஆப்பிள் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர தயாராக இல்லையாம் !

Tamil Mint

ஊசி இருந்தா தான போடுவீங்க… கொரோனா தடுப்பூசியை திருடிய நபர்கள்…! எப்படி எல்லாம் யோசிக்குறாங்க?

Tamil Mint

“விவசாயிகள் பற்றி பேசும்போது பாலியல் அச்சுறுத்தல்கள் வருகின்றன” -இங்கிலாந்து நடிகை

Tamil Mint