ஜியோ-கூகுள் கூட்டணியில் விற்பனைக்கு வருகிறது மலிவு விலை ஸ்மார்ட்போன்..!


ஜியோ-கூகுள் கூட்டணியில் உருவாகியுள்ள மலிவு விலை ஜியோ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 10ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, “இந்தியாவின் மலிவு விலை ஸ்மார்ட்போனாக ஜியோ-கூகுள் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் இருக்கும்.

Also Read  ஜூலை 16ம் தேதி பள்ளிகள் திறப்பு - எங்கு தெரியுமா?

புதிய ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் 2ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதற்காக கூகுள் தொழில்நுட்பத்துடன் கூடிய கிளவுட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளோம்.

இந்த ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் வரும் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 10ம் தேதி விற்பனைக்கு வரும்” என தெரிவித்தார்.

இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு வெர்ஷனை கொண்டிருக்கிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டன்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து பேசிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, “இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்காக புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவது மற்றும் தொழில்நுட்பத்துடன் வணிகங்களை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். ஜியோ 4ஜி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.

Also Read  விலங்குகளில் இருந்து கொரோனா பரவுமா? - நிபுணர் விளக்கம்

முன்னதாக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி பேசியபோது, “ரிலையன்ஸ் அறக்கட்டளை நவி மும்பையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

ஜியோ பல்கலைக்கழகம் தனது முதல் கல்வி ஆண்டில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், டிஜிட்டல் மீடியா, இளங்கலை பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் தொடர்பு ஆகிய பாடப் பிரிவுகளை துவங்க உள்ளது” எனக் கூறினார்.

Also Read  சியோமி எம்ஐ11 சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகள் பயங்கரவாதிகள் அல்ல, நாட்டிற்கு வளத்தை அளிப்பவர்கள்: ராகுல் காந்தி

Tamil Mint

படிப்புக்காக உணவு டெலிவரி செய்யும் இளம்பெண்!

Shanmugapriya

கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டுள்ளது: பிரதமர் மோடி

Tamil Mint

லாரி வாடகை 30% உயர்த்த முடிவு – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

Jaya Thilagan

தாடிக்கு குட்பாய் சொல்ல போகும் பிரதமர் மோடி…! காரணம் இதுதான்…!

sathya suganthi

அதிரடி ஆஃபர்களுடன் களமிறங்கியுள்ள சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்!!!

Lekha Shree

பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் முதலிடம் பிடித்த மேற்கு வங்கம்…!

Devaraj

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவமாட இதுதான் காரணம் – உலக சுகாதார அமைப்பு

sathya suganthi

பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை…! முழு விவரம் இதோ…!

sathya suganthi

கேரள அமைச்சரவையில் புதுமுகங்கள் – சைலஜா டீச்சர் வரவேற்பு

sathya suganthi

தந்தை பாசத்தால் உத்திரப்பிரதேச முதல்வரை நெகிழ வைத்த சிறுமி

Tamil Mint

கொரோனாவை விரட்ட மூக்கில் எலுமிச்சை சாறு விட்ட ஆசிரியர் – வதந்தியால் பலியான பரிதாபம்

Devaraj