ஜியோ – கூகுள் கூட்டணி : செப்.10 ஆம் தேதி வருகிறது விலை குறைவான ஸ்மார்ட் போன்…!


முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து உருவாக்கியுள்ள ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்.

இந்தியாவின் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்றும் புதிய ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் 2ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்றும் முகேஷ் அம்பானி கூறினார்.

5ஜி-க்கு விரைவாகவும், தடையின்றி மேம்படுத்தவும் ஜியோ தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், 5ஜி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க, உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து 5ஜி சாதனங்களை உருவாக்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Also Read  12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - மத்திய அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு…!

இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன், வரும் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 10ம் தேதி விற்பனைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

கூகுளின் ஆண்ட்ராய்டு வெர்ஷனை கொண்டுள்ள இது, வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது என முகேஷ் அம்பானி விளக்கமளித்தார்.

Also Read  யூடியூப்பர்களுக்கு வந்த சோதனை – வரி கட்ட சொல்லி கூகுள் போட்ட அதிரடி உத்தரவு

இதனைத்தொடர்ந்து பேசிய கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்காக புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவது மற்றும் தொழில்நுட்பத்துடன் வணிகங்களை மேம்படுத்துவதே தங்கள் நோக்கம் என்றார்.

4ஜி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் விரைவில் வெளிவரும் என்றும் கூறினார்.

Also Read  பழங்குடியின மக்களுக்காக போராடிய ஸ்டேன் சுவாமி காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு…! இந்தியாவில் இவ்வளவு கோடீஸ்வரர்களா…! முழு விவரம் இதோ…!

Devaraj

வளைத்து வளைத்து மணமகளை போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர்; ஆத்திரத்தில் மணமகன் செய்த செயல் என்ன தெரியுமா? | வீடியோ

Tamil Mint

நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் திமுக எம்பிக்கள் போராட்டம்

Tamil Mint

கல்யாண சாப்பாட்டில் Maggi Noodles..! – வைரலாகும் வித்தியாசமான மெனு!

Tamil Mint

மினி லாக்டவுனுக்கு வாய்ப்பு…! பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்…!

Devaraj

கொரோனா தணியும் வரை ஊரடங்கு வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

Shanmugapriya

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…! மாலை மோடி ஆலோசனை…!

sathya suganthi

இந்தியா : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.92 லட்சமாக உயர்வு!

Tamil Mint

கூகுள் சார்பாக இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகள்! – சுந்தர் பிச்சை

Lekha Shree

இந்தியா: தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.34 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

பீகாரின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: பிரதமர்

Tamil Mint

பாஜக தேசிய மகளிரணி தலைவர் ஆனார் வானதி சீனிவாசன், குஷ்புவுக்கும் விரைவில் புது பதவி

Tamil Mint