காலியாக உள்ள 3,500க்கும் அதிகமான நீதிமன்ற வேலை…! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!


சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், காவலர், சுத்தம் செய்பவர் உள்ளிட்ட 3557 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்தது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 6ம் தேதியுடன் அவகாசம் முடிவுற்ற நிலையில் மீண்டும் கால அவகாசம் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 9ம் தேதி வரையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியாக உள்ள பணியிட விபரங்கள் :

Office Assistant -1911
Office Assistant cum Watchman – 01
Copyist Attender – 03
Sanitary Worker – 110
Scavenger – 06
Scavenger/Sweeper – 18
Scavenger or Sanitary Worker – 01
Gardener – 28
Watchman – 496
Night Watchman – 185
Night Watchman cum Masalchi – 108
Watchman cum Masalchi – 15
Sweeper – 189
Waterman/woman – 01
Masalchi – 485

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Also Read  கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது - அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

விண்ணப்பதாரர் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம்
விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற இணையதளத்தின் மூலம் 09.07.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Also Read  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ…!

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பதாரர்கள் மூன்று தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அதன்படி, விண்ணப்பதாரருக்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் Oral Test உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Also Read  பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம்..!

மேலும் விபரங்களுக்கு https://www.mhc.tn.gov.in அல்லது https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ அல்லது https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Addendum_04062021.pdf எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தமிழக துணை முதலமைச்சர் ஓ.பழனிசாமி!” – அமைச்சரின் பேச்சால் சலசலப்பு!

Lekha Shree

ரயில்வே டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கவில்லை

Tamil Mint

தமிழகம்: தசம மதிப்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…!

Lekha Shree

“சசிகலா தாய் அல்ல பேய்” – நத்தம் விஸ்வநாதனின் அதிரவைக்கும் பேச்சு…!

sathya suganthi

தமிழகத்தில் இனி மின் தடை இருக்காது – அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

sathya suganthi

சென்னையில் ஒரு பெய்ரூட்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

Tamil Mint

கடலூர்: திடீரென வெடித்து சிதறிய வீட்டு உபயோகப் பொருட்கள்… காரணம் இதுதான்..!

Lekha Shree

சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவிப்பு

Tamil Mint

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Lekha Shree

செய்தியாளரை தாக்கினாரா கமல்ஹாசன்…! வலுக்கும் கண்டனம்…!

Devaraj

கல்வியில் பட்டம் பெற்றவரா..! நீங்கள். இதோ உங்களுக்கான மத்திய அரசு வேலை… விரைவில் முந்துங்கள்….

VIGNESH PERUMAL

சென்னையில் தயாராகும் போலீஸ் அருங்காட்சியகம்

Tamil Mint