கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 2,658 பத்திரிகையாளர்கள் படுகொலை!


நாட்டில் நிகழும் பல்வேறு சம்பவங்களையும் தொகுத்து செய்தியாக மக்களிடம் சென்று சேர்க்கும் பணியில் செய்தி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.  

இரு நாடுகளுக்கு இடையேயான போர், உள்நாட்டு கலவரம், கடும் மழை, வெயில் காலங்களிலும் சம்பவ பகுதிகளுக்கு நேரிடையாக சென்று உண்மைகளை சேகரித்து வரும் பணியில் பத்திரிகையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவை தவிர்த்து அரசியல் நிகழ்வுகள், கலை துறை சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களையும் சுவைப்பட மக்களுக்கு கொண்டு சேர்க்கின்ற பணியில் பத்திரிகையாளர்களின் பங்களிப்பு அதிகம்.

உலகத்தில் பத்திரிகை துறையினருக்கு அதிக ஆபத்துள்ள நாடுகளின் வரிசையை சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு அறிக்கையாக பட்டியலிட்டு உள்ளது.

Also Read  கொரோனா 3வது அலை தொடக்கம்…! வெளியான அதிர்ச்சி தகவல்..!

கடந்த 1990ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடந்த தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய நாடுகளின் வரிசையில் ஈராக் முதல் இடம் வகிக்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில், கடந்த 30 ஆண்டுகளில் 340 பத்திரிகையாளர்கள்  கொல்லப்பட்டு உள்ளனர்.  இதனை தொடர்ந்து மெக்சிகோ (178 பேர்), பிலிப்பைன்ஸ் (178 பேர்) மற்றும் பாகிஸ்தான் (138 பேர்) ஆகிய நாடுகளும் அந்த வரிசையில் உள்ளன.

Also Read  உரிமையாளர் மீது அதீத பாசம்; ஆம்புலன்ஸ் பின்னாலேயே பல கி.மீ தூரம் ஓடிய நாய்!

நடப்பு 2020ம் ஆண்டில் குண்டு வெடிப்புகள், எல்லை கடந்த தாக்குதல் சம்பவங்கள், குறிவைத்து தாக்குதல் ஆகியவற்றில் 15 நாடுகளை சேர்ந்த 42 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இவற்றில் மெக்சிகோ (13 பேர்) முதல் இடத்திலும், அதனை தொடர்ந்து பாகிஸ்தான் (5 பேர்), பிலிப்பைன்ஸ், சோமாலியா மற்றும் சிரியா ஆகியவை (தலா 2 பேர்) அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.

Also Read  கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்தில் ஒருவருக்கு நீண்ட கால பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இதேபோன்று கேமரூன், ஹோண்டுராஸ், பராகுவே, ரஷ்யா, ஸ்வீடன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் கொல்லப்பட்டு உள்ளனர். 

கடந்த 1990ம் ஆண்டில் இருந்து இந்திய துணை கண்டத்தில் அமைந்த பாகிஸ்தானில் ஏறக்குறைய ஒவ்வோர் ஆண்டும் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வந்துள்ளன.  

ஆசிய பசிபிக் பகுதியில் 40 சதவீதம் படுகொலைகள் பாகிஸ்தானிலேயே நடந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவலை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம் – 71 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

விடாப்பிடி கிடாப்பிடி…! விஷப் பாம்புடன் கட்டெறும்பு சண்டையிட்ட காட்சி…!

Devaraj

அழியும் காபிச் செடிகள் – எதிர்காலத்தில் காட்டுவகை காபி தான் கைக்கொடுக்குமாம்…!

Devaraj

”என் வாழ்க்கையின் மோசமான நாட்கள்”: கண்ணீர் விட்டு கதறி அழுத மியா கலிஃபா!

Devaraj

சிங்கிள்’ஸ் இனி ஜோடியாக ஒர்க் அவுட் செய்யலாம்…! வைரலாகும் பெண்ணின் வீடியோ!

Lekha Shree

அமெரிக்காவிற்கு பிறநாட்டினர் செல்ல அனுமதி…!

Lekha Shree

நட்பே துணை…! பள்ளத்தில் இருந்து போராடி மீண்ட யானைகள்…!

Devaraj

மியான்மரில் தீவிரமடையும் கலவரம் – பச்சிளம் குழந்தை உள்பட ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொலை

Devaraj

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ரூ.196 கோடி நிவாரணம் – கருப்பினத்தவரின் குடும்பத்துக்கு அறிவிப்பு

Devaraj

“சிகிச்சையை நிறுத்திவைத்திருந்த நேரத்தில் கரம் கோர்த்தோம்” – கொரோனா வார்டில் நடந்த திருமணம்!

Tamil Mint

அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாகாணத்தை அதிபர் டிரம்ப் கைப்பற்றினார்.

Tamil Mint

அடேங்கப்பா! – துபாயில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ள இந்து கோயில்!

Tamil Mint