a

வெண்டிலேட்டர் கிடைக்காமல் உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள்! உ.பி.யில் தொடரும் சோகம்!


உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்றறால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களில் 6 பேர், கடந்த 10 நாட்களில் வென்டிலேட்டர் கிடைக்காமல் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்மாநிலத்தில் கொரோனா 2வது அலையின் வீரியம் அதிகமாக உள்ள நிலையில், பத்திரிகையாளர்கள் பலரும் நோய் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களில் பலருக்கு அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோரின் சிபாரிசு இருந்த போதிலும், சொந்த முயற்சியில் ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்தும் அதற்கான வென்டிலேட்டர் கிடைக்காத அவலம் அங்கு நிலவி வருகிறது.

Also Read  கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி!

அந்த வகையில், ஜதீத் அமல் உருது பத்திரிகையின் செய்தியாளார் சச்சிதானந்த் குப்தா, மூத்த பத்திரிகையாளரான வினய் ஸ்ரீவாத்ஸவா, பயனியர் ஆங்கில நாளேட்டின் அரசியல் செய்திப் பிரிவு பொறுப்பாளர் தவிஷி ஸ்ரீவாத்ஸவா, இளம் பத்திரிகையாளர்கள் பவண் மிஸ்ரா, அங்கிட் சுக்லா, உ.பி. பத்திரிகையாளர்கள் குழுவில் புதிதாகத் தேர்வான பிரோமத் ஸ்ரீவாத்ஸவா ஆகியோர் உயர்மட்ட சிபாரிசு இருந்தும் வென்டிலேட்டர் வசதி கிடைக்காமல் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

மேலும், தலைநகர் லக்னோவில் மட்டும் சுமார் 15 பத்திரிகையாளர்களுக்கும் அவர்களின் உறவினர்கள் சுமார் 20 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  90 நாட்களுக்கு தொடர்ந்து பறக்கும் டிரோன்... இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு தயாரிப்பு!

இதே போல், மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவை தேர்தல் செய்திகளைச் சேகரிக்க அம்மாநிலப் பத்திரிகையாளர்களுடன் டெல்லியில் இருந்தும் பலர் சிறப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களில் சுமார் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குறையாத கொரோனா பாதிப்பு – கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

Lekha Shree

பிரதமரின் சென்னை வருகைக்கு முதல் எதிர்ப்பு… ட்விட்டரில் #GoBackModi என பதிவிட்ட பிக்பாஸ் ஓவியா…!

Tamil Mint

தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்முறையாக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி!

Shanmugapriya

திணறும் கேரளா.. இன்று ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா பாதிப்பு

Ramya Tamil

வாக்கு இயந்திரங்களுடன் உறவினர் வீட்டில் படுத்து தூங்கிய அதிகாரி…!

Devaraj

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

ராஜஸ்தான் : தாயத்து செய்ய புலி மீசையை வெட்டிய வனத்துறை அதிகாரிகள்!

Lekha Shree

கொரோனா தடுப்பு கவசத்தை அணிந்து ரூ.13 கோடி மதிப்பிலான தங்க நகைகளை திருடிய நபர்! – வீடியோ

Tamil Mint

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்:

Tamil Mint

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Tamil Mint

“மேற்கு வங்கத்திற்கு முதுகெலும்பு உள்ளது; எப்போதும் வளையாது” – மம்தா பானர்ஜி

Shanmugapriya

வன்முறையை தடுக்க முடியவில்லை – பதவியை ராஜினாமா செய்வதாக திரிணாமூல் காங். எம்.பி. அறிவிப்பு

Tamil Mint