பொங்கல் பரிசுத் தொகுப்பு – புளியில் பல்லி இருந்த விவகாரம்…. குப்புசாமி மறைவிற்கு நியாயம் கேட்கும் நெட்டிசன்கள்..!


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கியதில் புளியில் பல்லி இருந்ததாக நந்தன் என்பவர் கடைக்காரரிடம் கேட்டபோது முறையான தகவல் கிடைக்காதது குறித்து செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்திருந்தார்.

இதைதொடர்ந்து அவர் அவதூறு பரப்பியதாக ரேஷன் கடை ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் நந்தன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். நந்தன் மீது அளிக்கப்பட்ட புகாரால் அவரது மகன் குப்புசாமி கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

Also Read  "பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி" - முதலமைச்சர் ஸ்டாலின்

மன உளைச்சல் இருந்ததாக கூறப்பட்ட நந்தனின் மகன் குப்புசாமி நேற்றைய தினம் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான சரியான காரணம் தெரியவில்லை.

இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி குப்புசாமி உயிரிழந்தார்.

Also Read  விமானம் தரையிறங்குவதில் ஏற்பட்ட சிக்கல்… நடிகை ரோஜா வெளியிட்ட வீடியோ வைரல்..!

இவரது மறைவு குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இந்நிலையில், அவரது மறைவிற்கு நியாயம் வேண்டும் என பலர் ட்விட்டரில் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், #JusticeforKuppusamy என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாட்டிலேயே முதல்முறையாக 2 அடுக்காக அமையும் மதுரவாயல் சாலை…!

Lekha Shree

“சீட் வேணுமா தம்பி”; நான் தண்ணி கேன் போட வந்தேன் சார் – வைரலாகும் கமலஹாசன் மீம்ஸ்!

Lekha Shree

தமிழகத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

Tamil Mint

கொரோனா வார்டுக்கு கவச உடையில் சென்ற கனிமொழி எம்.பி…!

sathya suganthi

காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Mint

“ரயில்களை வழக்கம் போல் இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

தனியா வாங்க பேசுவோம், ஓட்டம் பிடித்த எஸ் ஏ சி

Tamil Mint

தமிழக அமைச்சரவை கூட்டம் 14 ஜூலை

Tamil Mint

*காதல் திருமணம் குறித்து அதிமுக எம்எல்ஏ பிரபு விளக்கம்

Tamil Mint

‘நேற்று தனுஷ்.. இன்று கனிமொழி..!’ – தமிழகத்தில் தொடரும் நீட் தற்கொலைகள்…!

Lekha Shree

தமிழக சட்டமன்ற தேர்தலால் தள்ளிப்போகும் முன்னணி நடிகர்களின் படங்கள்?

Lekha Shree

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

Shanmugapriya