‘விஸ்கி’ விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வால்..!


விஸ்கி குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை காஜல் அகர்வால். தற்போது

அதிக அளவில் பாலோயர்களை வைத்திருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் பிரபலங்களிடம் தங்களது வியாபாரத்தை பற்றி பிரபலப்படுத்தி பதிவிட பல நிறுவனங்கள் பல லட்சங்களை தருகிறார்கள்.

சமீபத்தில் நடிகை ரெஜினாவும் விஸ்கி குறித்த விளம்பரம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார். அந்த விளம்பரத்திற்கு பல கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், நேற்று நடிகை காஜல் அகர்வாலும் அதேபோன்று விஸ்கி குறித்த விளம்பரம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

Also Read  "லவ் யூ" - காத்திருந்த ரசிகருக்கு சர்பிரைஸ் கொடுத்த யுவன்…!

இரண்டு நாட்களுக்கு முன்பு அவருடைய கணவருடன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தனது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார். அன்றைய தினத்தில் தான் இந்த விஸ்கி விளம்பரத்திற்கான புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த விளம்பரத்திலும் கணவன் மனைவி இருவரும் இடம் பெற்றுள்ளார்கள். அதில், தீபாவளி பார்ட்டிக்கு குறிப்பிட்ட பிராண்ட் விஸ்கி பொருத்தமானது எனக் குறிப்பிட்ட காஜல் அகர்வால், இந்த பதிவு 25 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே என்றும் பொறுப்புணர்ந்து குடியுங்கள் என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்த விளம்பரத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், சமூக வலைதளங்களில் பதிவிடும் விளம்பரங்களுக்கும் அரசு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என சில சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பேரறிவாளனின் தாயார் வாழ்க்கையை படமாக்கத் திட்டம்!” – இயக்குனர் வெற்றிமாறன்

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

Lekha Shree

அம்மா,அப்பாவுடன் நடிகை சாய் பல்லவி.. வைரலாகும் அழகிய குடும்பம்!

HariHara Suthan

சிம்புவின் ‘மாநாடு’ முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

”23 ஆண்டுகள் இயக்குநராக மற்றும் இன்று முதல்…”: செல்வராகவன் கொடுத்த சூப்பர் அப்டேட்!

Bhuvaneshwari Velmurugan

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

suma lekha

திரௌபதி பட இயக்குநரின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

suma lekha

இணையத்தில் கசிந்த ‘பிக்பாஸ் 5’ போட்டியாளர்களின் பட்டியல்…! ஆர்வத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

“சரவெடி தெறிக்க தெறிக்க” – வெளியானது ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடல்…!

Lekha Shree

ஆளப்போறான் தமிழனை வென்ற ‘வாத்தி கம்மிங்’…!

Lekha Shree

மீண்டும் இணையும் ‘டாக்டர்’ வெற்றி கூட்டணி? ரசிகர்கள் குதூகலம்..!

Lekha Shree

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு நடிகை சமந்தா செய்த உதவி… குவியும் பாராட்டுக்கள்..!

Lekha Shree