கொரோனாவுக்கு நடுவே சத்தமின்றி ஒரு படத்தில் நடித்து முடித்த காஜல் அகர்வால்…!


நடிகை காஜல் அகர்வால் பாரிஸ் பாரிஸ், நடன இயக்குனர் பிருந்தா இயக்கியுள்ள ஹேய் சினாமிகா, இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ஆச்சார்யா என ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் கொரோனா காலத்திற்கு இடையேயும் ‘கோஷ்டி’ என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இந்த படத்தை கதை சொல்ல போறோம், குலேபகாவலி, காத்தாடி, ஜாக்பாட் படங்களை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். சுதன் மற்றும் ஜெயராம் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் கேஎஸ் ரவிக்குமார், யோகிபாபு, சுப்பு பஞ்சு அருணாச்சலம், மொட்ட ராஜேந்திரன், சத்யன், ஊர்வசி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், லிவிங்ஸ்டன், மதன்பாபு, சந்தானபாரதி, ஆடுகளம் நரேன் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

Also Read  'பிச்சைக்காரன் 2' - வெளியானது 'மாஸ்' டைட்டில் லுக்… படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

சாம் சி. எஸ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது. இது அரசியலை கிண்டல் செய்யும் காமெடி படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது.

அரசு அறிவித்துள்ள அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் முறையாக கடைபிடித்து இப்படத்தை படமாக்கி முடித்து உள்ளோம் என படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  கொரோனா புதிய உச்சம் - இந்தியர்கள் அமெரிக்கா செல்ல தடை!

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மற்ற பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நீ நட்ட மரமெல்லாம் ஆக்ஸிஜன் தர காத்திருக்கு!”..Vijay TV புகழ் நேரில் சென்று அஞ்சலி!

HariHara Suthan

பிரமாண்ட வசூல் சாதனை செய்த காங் vs காட்சில்லா..எவ்வளவு வசூல் தெரியுமா??

HariHara Suthan

விவசாயிகள் போராட்டம்… “அசுரன்” டீமில் இருந்து வந்த அழுத்தமான ஆதரவு குரல்…!

Tamil Mint

“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை ஆவேசம்!

Lekha Shree

இசையை மையப்படுத்தும் இசைப்புயலின் புதிய அவதாரம்…

VIGNESH PERUMAL

‘விடுதலை’ படத்திற்காக வெற்றிமாறனுடன் முதல்முறையாக இணையும் பிரபல இயக்குனர்…!

Lekha Shree

இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்த அமீர்கான்.!

Lekha Shree

‘ஆஷிக் 2’ கதாநாயகியின் மாலத்தீவு விசிட் – வேற லெவல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மரணம்!

Shanmugapriya

மனைவியின் முகத்தை கடைசியாக காண பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்…!

Lekha Shree

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கும் படம் – இவர் தான் ஹீரோ…!

sathya suganthi

‘குக்கு வித் கோமாளி’ கனி வீட்டில் காரக்குழம்பு சாப்பிட்ட பிரபல ஹீரோ…! வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree