கள்ளக்குறிச்சி: பாட்டாசு கடை தீ விபத்தில் 6 பேர் பலி..! ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

நேற்று மாலை 7 மணி அளவில் பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்து, பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் நாலாபுறமும் வெடித்து சிதறி. அதோட அருகில் இருந்த செல்போன் மற்றும் பேக்கரி கடைக்கும் தீ பரவியது.

அப்போது கடையில் இருந்த 2 சிலிண்டர்கள் வெடித்ததில் கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் கடை அருகே பூ விற்றுக் கொண்டிருந்தவர்கள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

Also Read  திருட முயன்று ஏடிஎம் இயந்திரத்திற்குள் சிக்கிய திருடன்… நாமக்கல்லில் நிகழ்ந்த வேடிக்கை சம்பவம்..!

காயமடைந்த 25 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதில் நாசர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். முன்னதாக தகவலறிந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு.

Also Read  தாமரை மலர்கிறது…! மாம்பழம் பழுக்கிறது…!

இடத்ற்கிடையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சமும் தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Also Read  திடீரென வெடித்த சரக்கு கப்பல்… அதிர்ந்த கட்டிடங்கள்… வைரல் வீடியோ இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க நடவடிக்கை” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Lekha Shree

ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ள பட்டியல்: பரபரப்பு பின்னணி

Tamil Mint

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackStalin ஹேஷ்டேக்…! என்ன காரணம்?

Lekha Shree

மதுரை இரண்டாம் தலைநகரம்: முதல்வர் பேச்சை கேட்கவில்லையா அமைச்சர்?

Tamil Mint

பிற மாவட்டங்களுக்கு செல்ல இபாஸ் தேவையா? – தமிழக அரசு விளக்கம்

sathya suganthi

“அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது”- யு.ஜி.சி. திட்டவட்டம்.

Tamil Mint

நடிகர் விவேக் உயிரிழப்புக்கு தடுப்பூசி காரணமல்ல…!

Lekha Shree

“ஜெய்பீம் உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்ட படமா?” – சூர்யாவுக்கு அன்புமணி கேள்வி..!

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் சிகிச்சை வார்டுகளாக மாறும் கல்லூரிகள்

Devaraj

முக்கிய ஆலோசனையில் ஈடுபடப் போகும் முதல்வர்: லாக் டவுன் நீங்குமா?

Tamil Mint

தொடர்மழை மழை காரணமாக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு!!

Tamil Mint

திடீரென தீ பிடித்து எரிந்த அரசு பேருந்து…! கோயம்பேட்டில் பரபரப்பு..!

Lekha Shree