a

கள்ளக்குறிச்சி இளம்பெண் கொலை சம்பவம்… நடந்தது என்ன?


சமீபத்தில் கள்ளக்குறிச்சி அருகே நடந்த இளம்பெண் கொலை சம்பவம் அப்பகுதியை பீதியடைய செய்துள்ளது. இக்கொலைக்காக அரசியல் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் உட்பட பலர் குரல் எழுப்பினர்.

கடந்த 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள தேவியானந்தல் என்னும் கிராமத்தில் வசித்த சரஸ்வதி (19) என்ற இளம்பெண் அவரது வீட்டின் கழிவறை பக்கத்தில் சடலமாக கிடந்தார்.

அவரது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவரது கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போதுதான் சரஸ்வதியின் காதல் பற்றி தெரியவந்துள்ளது. பண்ருட்டியில் உள்ள நர்சிங் பள்ளியில் படித்து பட்டம் பெற்றவர் சரஸ்வதி. அப்போது அங்கே பழக்கமான ரங்கசாமி (21) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

Also Read  இரவு நேர ஊரடங்கு - பேருந்து போக்குவரத்தில் மாற்றம்!

இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு உண்டாகியுள்ளது. அதிலும் சரஸ்வதியின் வீட்டில் கடுமையாக எதிர்த்துள்ளனர். காரணம் இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

அதன்பின்னர், சரஸ்வதியின் வீட்டில் அவசரமாக மாமன் மகனுடன் நிச்சயம் நடந்துள்ளது. இதை அறிந்த ரங்கசாமி “என்னை தவிர யாரையும் நீ திருமணம் செய்யக்கூடாது. எப்படி இன்னொருவருடன் திருமணம் செய்ய சம்மதித்தாய்” என மிரட்டியுள்ளார்.

Also Read  பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

இதற்கு திட்டவட்டமாக சரஸ்வதி என்னால் என பெற்றோரை மீறி எதுவும் செய்ய முடியாது என்று கூறவே, கடந்த 2ம் தேதி தனது நண்பர்கள் ரவீந்திரன் மற்றும் 17 வயது சிறுவனுடன் சரஸ்வதியின் வீட்டிற்கு சென்று சரஸ்வதியை வரவழைத்து பேசியுள்ளார் ரங்கசாமி. மீண்டும் தகராறு முற்றி அவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் காதலன் ரங்கசாமி.

சரஸ்வதியிடன் பேச அவருக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார் ரங்கசாமி. அந்த செல்போன் டவரை வைத்து குற்றவாளிகளை பிடித்துள்ளனர். ஆந்திரா பார்டரில் ரங்கசாமியும், ரவீந்திரனும், 17 வயது சிறுவனும் ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப்பது.

Also Read  அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு…!

அந்த 17 வயது சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர். ரங்கசாமியையும் ரவீந்திரனையும் கைது கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால், அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்: கோவையில் கமல்ஹாசன் பேட்டி

Tamil Mint

இன்று காலை உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை

Tamil Mint

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!

Tamil Mint

நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

Tamil Mint

உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செல்கின்றார்

Tamil Mint

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் கணவருக்கு நிபந்தனை ஜாமின்

Tamil Mint

தொழிலதிபரை மணக்கிறாரா பிக் பாஸ் ஜூலி?

Tamil Mint

கொவிட்-19: அதிக பரிசோதனைகள் மூலம் ஆபத்திலிருந்து மீண்டு வரும் தமிழகம்

Tamil Mint

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக…!

Lekha Shree

முதலமைச்சர் பற்றி ஆ.ராசா சர்ச்சைப் பேச்சு; கனிமொழி கண்டனம்!

Lekha Shree

“கோயில் நிலங்களை மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டுமே வழங்க வேண்டும்”

Tamil Mint