a

கொரோனா பரவல் தடுப்பு – கமல்ஹாசனின் 16 அட்வைஸ் இதோ…!


கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், நோய் தொற்றுக்கு எதிராக நாமே தீர்வு என நம்பிக்கையுடன் போராடினால் நாளை நமதாகும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோய்க் கிருமியிடம் இருந்து தப்பிப்பதற்கான 16 வழிமுறைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவை,

1.எந்தத் தயக்கமும் அச்சமும் காட்டாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். சுற்றத்தாரை தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்துங்கள். நான் இரண்டு தவணைகளை முடித்துவிட்டேன். எனக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

2.பொதுவெளி நடமாட்டத்தை முடிந்த மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள்.

3.அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே சென்று வரும் பொறுப்பை வீட்டில் இருக்கும் இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

4.தவிர்க்க முடியாமல், வெளியில் செல்ல நேர்ந்தால் தரமான முகக்கவசம் தவறாது அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முடிந்தவரை கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது ஆகியவற்றை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

Also Read  பரோட்டா சாப்பிடுவதில் தகராறு - ஒருவர் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு!

5.எப்போது வெளியே சென்று வந்தாலும் உடனடியாகக் குளித்து ஆடைகளை மாற்றிக்கொள்வது அவசியம்.

6.கைகளை சோப்பினால் அல்லது சானிடைசரால் அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

7.அடிக்கடி நமது பாரம்பரிய முறைப்படி நீராவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை மேற்கொள்வது அவசியம்.

8.ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு மாறிக்கொள்வதுடன், மரபுசார் மருத்துவர்கள் பரிந்துரைப்பது போல அன்றாடம் ஒரு ரசம் வைத்துச் சாப்பிடுவதும் நல்லது.

9.இரண்டாவது அலை குழந்தைகளையும் அதிக அளவில் பாதிக்கிறது. வீட்டில் குழந்தைகள், முதியோர் இருந்தால், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

10.உறுதி செய்யப்பட்ட அதிகாரபூர்வமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள். வதந்திகளை நம்பாதீர், பரப்பாதீர்.

Also Read  சின்னத்தை கைவிட்ட கமல்; ம.நீ.ம. விளக்கம்

11.மனநிலையை ஆரோக்கியமாக பாசிட்டிவாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதற்கு நல்ல புத்தகங்களை வாசிப்பது, இசை கேட்பது, நண்பர்களோடு போனில் அல்லது இணையத்தில் உரையாடுவது போன்றவை உதவக்கூடும்.

12.உங்களையே நம்பி இருக்கும் பணியாளர்கள், சிறு வணிகர்கள், சிறுசிறு சேவைகளை நல்குபவர்களைக் கைவிடாதீர்கள். உலகமே ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்க வேண்டிய தருணம் இது. முடிந்த மட்டும் பிறருக்கு உதவுங்கள்.

13.கொரோனா தொற்று பெருநகர்ப்புறங்களில் அதிகமாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் மக்கள்தொகை பெருக்கமும், நெருக்கடியும்தான். சமவாய்ப்புள்ள நகரங்கள், தற்சார்பு கிராமங்கள்தான் உலகமே செல்ல வேண்டிய திசை. உங்கள் தொழிலை, சேவையை, வேலைகளை உங்கள் சொந்த ஊரில் இருந்தே செய்ய முடியும் என்றால் அதற்கான முயற்சிகளை இன்றே மேற்கொள்ளுங்கள்.

14.அரசுகளால் ஓர் எல்லைக்கு மேல் நம்மைக் காக்க முடியாது என்பதே இன்றைய புள்ளிவிவரங்கள் காட்டும் நிதர்சனம். மருத்துவக் கட்டமைப்புக்கு மேலும் மேலும் சுமையைக் கூட்டக் கூடாது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள்.

Also Read  "கசப்பான அனுபவத்திற்கு தயாராகுங்கள்!" - தேர்தலுக்கு பின் கடுமையாகும் கொரோனா கட்டுப்பாடுகள்!

15.இறுதியாக மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கு, ‘உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை; உதிரத்தில் உண்டே உதவும் குணம்’ என்று உங்களைப் பற்றி நான் பெருமையாகக் குறிப்பிடுவதுண்டு. ஊரே முடங்கிக் கிடந்தபோது ‘நாமே தீர்வு’ என முதன்முதலில் களத்தில் இறங்கியவர்கள் நாம். நமது நற்பணிகளைத் தொய்வில்லாமல் தொடர்வோம்.

16.அருகிலிருக்கும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புகளுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறதென்பதை விசாரித்து உடனுக்குடன் உதவுங்கள். கொரோனா பெருந்தொற்று குறித்தும், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்க யார் என்ன முயற்சி செய்தாலும் எந்தத் தயக்கமும் இன்றி அவர்களோடு கரம் கோத்துப் பணியாற்றுங்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – உச்சநீதிமன்றம்.

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பா? செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை

Tamil Mint

புதுச்சேரியில் கஞ்சாவுக்காக போதை ஊசி விற்ற ஜிப்மர் மருத்துவர் கைது!

Tamil Mint

ஸ்டாலினிடம் ரூபாய் 1 கோடி கேட்டு துணை சபாநாயகர் வழக்கு: விளக்கம் கேட்கும் கோர்ட்

Tamil Mint

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்:

Tamil Mint

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி: தெற்கு ரயில்வே

Tamil Mint

சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

Tamil Mint

சசிகலாவை சந்திக்கும் பிரபலங்கள் – எம்எல்ஏக்களும் சந்திக்கப்போகும் தகவலால் அ.தி.மு.க. அதிர்ச்சி

Jaya Thilagan

சென்னையில் இன்று மழை பெய்யக்கூடும்

Tamil Mint

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பத்து நாட்கள் விடுமுறை

Tamil Mint

லதா ரஜினிகாந்த்தின் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கெடு

Tamil Mint

ஒரே தொகுதியில் அதிமுக, பாஜக தனித்தனியே பிரச்சாரம்!

Lekha Shree