பீஸ்ட் Vs விக்ரம்? – அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் கமலின் ‘விக்ரம்’…!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

Also Read  மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் காண விஜய் ஒப்புதல்?

சில மாதங்களுக்கு முன்பு ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படக்குழு காரைக்குடி, பாண்டிச்சேரியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. பின் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது.

விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘விக்ரம்’ படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

Also Read  ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகிறது விஜய் சேதுபதியின் 'Annabelle Sethupathi'…! ரசிகர்கள் ஆர்வம்..!

இந்த போஸ்டரை பகிர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நாளை மாலை 6 மணிக்கு விக்ரம் படத்தின் First Glance வெளியாகும் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் விக்ரம் படம் திரைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Also Read  வெளியானது 'நவரசா' டீசர்… வெளியீட்டு தேதியும் அறிவிப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்!

இதனால், தற்போது அடுத்த ஆண்டு ‘பீஸ்ட் Vs விக்ரம்’ ஆக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஒருவேளை பொங்கலுக்கு பீஸ்ட் ரிலீஸ் ஆனால் ‘வலிமை Vs பீஸ்ட்’ ஆக இருக்கும் எனவும் மொத்தத்தில் அடுத்த ஆண்டு செம்ம ட்ரீட் இருக்கும் என்ற உற்சாகத்தில் உள்ளனர் சினிமா ரசிகர்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை ஆண்ட்ரியாவின் சிகப்பு உடை சமையல்! வைரலாகும் புகைப்படம் இதோ…

Jaya Thilagan

தேர்தலில் வெற்றி பெற மக்களை கொல்கிறீர்கள்: நடிகர் சித்தார்த் விளாசல்

Devaraj

மீண்டும் தலைதூக்கும் ‘ஜெய் பீம்’ பட விவகாரம்…! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #SuriyaStopVanniyarHate …!

Lekha Shree

‘பாகுபலி’ நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா?

Lekha Shree

கவர்ச்சியின் உச்சத்தில் அனேகன் கதாநாயகி அமைரா தஸ்தூர்! இது கொஞ்சம் ஓவர் தான்…ரசிகர்கள் கிண்டல்…

HariHara Suthan

சிம்பு அறிக்கைகளில் அடிக்கடி பயன்படுத்தும் ATMAN வார்த்தை எதற்காக தெரியுமா?… தரமான சம்பவத்திற்கான அடித்தளம்…!

Tamil Mint

ஆக்‌ஷன் படத்தின் பிரபு தேவா.. வெளியான மாஸ் அப்டேட்

suma lekha

‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள்…!

suma lekha

“நீ இன்னும் சாகவில்லையா?” – மோசமாக கமெண்ட் செய்த நபருக்கு யாஷிகாவின் பதில்..!

Lekha Shree

இயக்குனர் ஆர்.என்.ஆர் மனோகர் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

Lekha Shree

“தேர்வு உயிரை விட பெரிது அல்ல” – நடிகர் சூர்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

Lekha Shree

சீதையாக நடிக்க கரீனா கபூர் எவ்வளவு கேட்டார் தெரியுமா?

Shanmugapriya