டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும்: கமல்ஹாசன்


மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். 

மத்திய அரசுடன் 5 முறை பேச்சுவார்த்தை நடந்த போதிலும் சுமூகமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வரும் 8 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர். 

Also Read  "காஷ்மீர் டு கன்னியாகுமரி" - சைக்கிளிலேயே பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த இளைஞரின் கதை!

இதைதொடர்ந்து, போராடி வரும் விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் இருந்து பல ஆதரவுகள் கூடியது. 

இதனை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் “விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் கோரிக்கையை ஏற்று மக்கள் நீதி மய்யம், டிசம்பர் 8ம் தேதி நடக்கவிருக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும்” என தெரிவித்தார். 

Also Read  பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!

மேலும் “விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு உடனே செவி சாய்க்க வேண்டுமென டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் உறுதியாக கூறினேன். 

அதைத்தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் விவசாய அணியை சேர்ந்தவர்களும் நேரடியாக போராட்ட களத்திற்கு செல்ல கட்சி முழு ஒத்துழைப்பையும் தரும். டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் விவசாயிகளின் குரலுக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் பங்குபெறும்” என பதிவிட்டார்.

Also Read  நிபா வைரஸ்: தமிழகத்தில் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்த அவைத்தலைவர் யார்.? : மதுசூதனனின் பதவிக்கு அதிமுகவில் மல்லுக்கட்டு.

mani maran

கமல் தனது திரைப்படங்கள் மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

தமிழக அரசின் இலவச தையல் மிஷின் பெற என்ன செய்ய வேண்டும்?

Lekha Shree

மதுரையில் 4 முக்கிய கோயில்களில் தரிசனத்துக்கு தடை!

suma lekha

சுதந்திர தினம்: பதக்கம் பெறும் தமிழக காவல்துறையினர்

Tamil Mint

கொரோனா 3-வது அலை அனைவரையுமே பாதிக்கும்.. எச்சரிக்கும் வல்லுனர்கள்

Ramya Tamil

கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்தற்கான காரணம், பாமக நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதுதான்.

Tamil Mint

தமிழகத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் இயங்க அனுமதி!

Tamil Mint

ஜெயலலிதா நினைவகத்தில் உருவாக்கப்பட்டு வரும் சூப்பர் வசதிகள்

Tamil Mint

மத்திய அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது: புது உத்தரவு

Tamil Mint

கூலித்தொழிலாளர் தலை வெட்டி கொலை: மதுரையில் நடந்த பகீர் சம்பவம்

Tamil Mint

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூட்டா சிங் மறைந்தார்

Tamil Mint